சபாஷ்! ரஜினி மாதிரி இல்லை.. உச்ச நட்சத்திரமாகவே தைரியமாக சினிமாவுக்கு குட்பை சொன்ன விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய சினிமாவில் உச்சநட்சத்திரமாக சுடர்விட்டு ஜொலிக்கும் போதே அப்படியே சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்குள் நுழைந்துவிட்ட நடிகர் விஜய்க்கு பாராட்டும் குவிகின்றன.

தேர்தல் அரசியல் என்பது வெற்றிகளை மட்டுமே இலக்காகக் கொண்டது. தேர்தல் அரசியலில் கால் வைப்பவர்கள் அத்தனை பேரின் இலக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். அதிகாரத்தை தங்கள் வசமாக்குவதுதான் அரசியலில் இறங்குபவர்கள் கனவு. அது ஜனநாயகம் தந்திருக்கும் உரிமை.

Actor Vijay One more Super Star from Tamil Cinema enters to Politics

பல்வேறு துறைசார்ந்தவர்கள் அரசியலில் இணைந்தாலும் சினிமா துறை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் நுழைவது எப்போதும் பரபரப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுமே இருந்து வருகிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக திமுக, அதிமுக எனும் இரு பெரும் திராவிட கட்சிகள் வேர்பிடித்து பெரு விருட்சமாக பல கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கங்களாக நிற்பதற்கு திரைத்துறை/ சினிமா துறை பிரதான அடித்தளங்களில் ஒன்றாக இருந்தது.

தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த பேரறிஞர் அண்ணா, அவரைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி, புரட்சி நகர் எம்ஜிஆர், ஜெயலலிதா என அத்தனை பேரும் திரைத்துறையுடன் இணைந்தவர்கள்தான். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் திரைத்துறையில் ஒரு அங்கமாக இருந்தவர்தான்.

அண்மையில் மறைந்த தமிழ்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வெகுவேகமாக எட்டிப் பிடித்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், இன்றைக்கும் அரசியல் கட்சியை முன்னெடுத்து நடத்தும் சரத்குமார் என இந்தப் பட்டியல் தமிழ்நாட்டில் நீளமானது.

இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவார்- வருவேன்... இதோ வந்துவிட்டேன்.. இதோ கட்சியே தொடங்கிவிட்டேன் என பேசிப் பேசி கட்சி தொடங்காமலேயே கட்சியை கலைத்த சரித்திரம் படைத்த உச்சநடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். அரசியலில் ஒரு கால்.. சினிமாவில் ஒரு கால் என இருதலை கொள்ளியாக தவித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வராமாலேயே தொடர்ந்தும் சினிமாவில் பயணித்து கொண்டே இருக்கிறார்.

இப்போது தமிழ் சினிமாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு இன்னொரு புதிய அரசியல் வரவு நடிகர் விஜய். தென்னிந்திய திரை உலகில் உச்சநட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர். இன்றைக்கும் விஜய் படங்கள் பல நூறு கோடிகளை தாண்டி வசூல் அள்ளிக் கொடுத்து கொண்டே இருக்கிறது. தற்போது 50ஐ வயதை கூட தொடாத நடிகர் விஜய், உச்சநட்சத்திரமாக திரை உலகின் உச்சத்தின் இருக்கும் போதே, இதோ நான் அரசியலுக்கு வந்துட்டேன்.. என் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம்; நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை; 2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதான் நோக்கம் என தெள்ளத் தெளிவான பார்வையுடன் எந்த வித குழப்பமும் இல்லாமல் பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

ஒப்புக் கொண்டு முடிக்க வேண்டிய சினிமா படங்களை முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேரமாக அரசியலில் குதிப்பதாகவும் அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

திரை உலகின் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறப்பதை அவ்வளவு எளிதாக துறப்பதற்கு எல்லாம் துணிவு வேண்டும். அந்த துணிவை தமது அறிக்கை மூலம் நடிகர் விஜய் அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்காகவே நடிகர் விஜய் பாராட்டுக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.

அரசியல் அதிகாரத்தை நோக்கிய நடிகர் விஜய்யின் பயணம் எத்தகைய சித்தாங்களை நோக்கியதாகவும் இணக்கமாகவும் இருந்துவிட்டு போகலாம். ஆனால் புகழின் உச்சத்தில் வசூல் ராஜாவாக திரைவானில் பறக்கும் போதே அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு அரசியலில் கால்பதித்த நடிகர் விஜய் பாராட்டுக்குரியவர்தானே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+