அடுத்த விஜயகாந்தாம் விஜய்! தமிழகத்தில் எகிறுதாம் ஆதரவு! நாம் தமிழர் தான் பாவம்! சாணக்யாவின் கணிப்பு!
சென்னை: 2026 தேர்தலை தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தற்போது தேர்தல் நடந்தால் கள அரசியல் நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட தகுந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது தமிழக வெற்றிக் கழகம். தற்போது தனது கடைசி படத்தில் நடித்து முடித்து இருக்கும் விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முதலில் மண்டல வாரியாக பூத் கமிட்டி ஏஜென்ட் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டு அதற்குப் பிறகு தொகுதி வாரியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் விஜயின் அரசியல் செயல்பாடுகள் குறித்து சாணக்யா நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளை நான்காக பிரித்து 3065 வாக்காளர்களிடம் இந்த கருத்து கணிப்பானது நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அதன் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே விவரித்து இருக்கிறார். அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் விடை அளித்திருக்கின்றனர். அதன்படி அரசியல்வாதியாக நடிகர் விஜயின் செயல்பாடு மோசம் என 20% பேரும், சூப்பர் என 26 சதவீதம் பேரும், பரவாயில்லை என 54 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். பரவாயில்லை என்ற கருத்தை அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் சூப்பர் என்ற கருத்தை அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் கூட்டணி வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு கூட்டணி வைக்கவே கூடாது என 25 சதவீதம் பேரும், கூட்டணி வைக்கலாம் என 28 சதவீதம் பேரும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என 47 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் 21 சதவீதம் பேர் விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என 25 சதவீதம் பேரும், தனித்து தான் போட்டியிட வேண்டும் என 54 சதவீதம் பேரும் கூறி இருக்கின்றனர்.
எதிர்க்கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என 16 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 11 சதவீதம் பேரும், பாஜகவுக்கு 20% பேரும், அதிமுகவுக்கு 53 சதவீதம் பேரும் சிறப்பாக செயல்படுவதாக அங்கீகாரம் அளித்திருக்கின்றனர்.
இந்த கருத்துக் கணிப்புகளின் மூலம் ஏற்கனவே களத்தில் இருக்கும் சீமானை விட விஜய் முந்தியே இருக்கிறார். கிட்டத்தட்ட 16 சதவீதத்திலிருந்து 32 சதவீத ஆதரவு விஜய்க்கு இருக்கிறது என்பது சாணக்யா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருப்பதாக கூறுகிறார் ரங்கராஜ் பாண்டே.
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி!












Click it and Unblock the Notifications