தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் நிதியுதவி... பலரும் பாராட்டு
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கோமதி மாரிமுத்துவுக்கு காசோலை வழங்கப்பட்டது.
3-வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று நாட்டிற்கு சிறப்பை தேடி தந்துள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு, திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கோமதி மாரிமுத்து குடும்பத்தினரை நேரில் அழைத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காசோலையை வழங்கினார்.
இந்தநிலையில், இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்க உள்ளனர்.
இதற்கிடையே, தமிழக அரசு உதவி கிடைத்தால் ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வேன் என்று கோமதி மாரிமுத்து கூறியுள்ள நிலையில். தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவியை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications