விஜய் எடுத்த முக்கியமான முடிவு.. 10 நாட்கள் தான் டைம்.. மாணவ, மாணவிகளுக்கு பெரிய குட்நியூஸ்
சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம். 10 நாட்களுக்குள் மாணவ மாணவிகளை தேர்வு செய்யுமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 5 வருடங்களாகவே அரசியலுக்கு வரப்போவதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்துடன் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்தார்.

தேர்தல் ஆணையத்திற்கு அளித்த நோட்டீஸில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக ஜோசப் விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த், பொருளாளராக வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளராக ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த நோட்டீஸில், இந்த பதிவு குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியாகி உள்ளது. இந்த நோட்டீசுக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் விண்ணப்பித்தவர்களுக்கு பெயர் ஒதுக்கப்பட்டு, கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும்.
தேர்தல் ஆணையத்தில் கட்சியை அதிகாரப்பூவர்மாக பதிவு செய்யும் பணியில் தீவிரமாக உள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே களம் இறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். நடிகர் விஜய் கட்சியை ஆரம்பிக்கும் முன்பே, மற்ற கட்சிகளில் உள்ளது போல், மாவட்ட அணி, நகர அணி, ஊரக அணி என்று எல்லா அணியும் உருவாக்கிவிட்டார். மகளிர் அணி, வழக்கறிஞர்கள் அணி, ஐடி விங் என கட்சிகளுக்கு உரிய எல்லா கட்டமைப்பையும் தெளிவாக உருவாக்கியுள்ளார்.
இதனிடையே பூத் வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் அளவிற்கு கட்சியை பலப்படுத்த விரும்பிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலியை அறிமுகம் செய்தார்.. இந்த ஆப் மூலம் இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி இருக்கிறது.
நடிகர் விஜய் தற்போது 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது, இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அண்மையில் விஜய் துபாய் சென்றார். இந்த படப்பிடிப்பு முடிந்து திரும்பிய பின்னர் முழுமையாக கட்சி பணியில் இறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ளதால் தேர்தல் முடிவு வெளியான பிறகும் தமிழக வெற்றிக் கழக தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவார் எனகிறார்கள் . அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது ஒருபுறம் எனில், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பார் என்று தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறுகிறார்கள். 10 நாட்களுக்குள் மாணவ மாணவிகளை தேர்வு செய்யுமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள லிங் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது பிறந்தநாளுக்கு முன்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.
அண்மையில் நடிகர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் மீண்டும் சந்திப்போம் என்று கூறியிருந்தார். எனவே மீண்டும் பரிசு வழங்கும் விழா நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications