‛பறந்த வந்த வாழ்த்து’.. நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் பேசிய விஜய்! நன்றி கூறி உரையாடியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இன்று நடிகர் விஜய் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு பேசி நன்றி தெரிவித்த நிலையில் அதுபற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் அறிவித்துள்ள நிலையில் 2026ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Actor vijay says thanked to Rajnikanth through phone call for wishing him for his political entry

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளதற்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

அதாவது சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‛‛அவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில் தான் இன்று நடிகர் ரஜினிகாந்துடன், நடிகர் விஜய் தொலைபேசியில் பேசியுள்ளார். கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்திடம் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வேளையில் கட்சி தொடங்கியதற்கான காரணம் உள்ளிட்ட சில விஷயங்களை நடிகர் விஜய், நடிகர் ரஜினிகாந்திடம் விளக்கி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+