234 தொகுதிகளிலும் நடிகர் விஜய்யின் இரவு நேர பாடச்சாலை இன்று தொடக்கம்.. என்ன பெயர் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் இரவு பாடச்சாலையை தொடங்கி வைக்கிறார் நடிகர் விஜய்.
காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இரவு பாடச்சாலைகளை தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக 234 தொகுதிகளுக்கும் விஜய் மக்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அரசியலில் நுழையும் ஆசையில் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் 2024 அல்லது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றம் , சட்டசபை தேர்தல்களுக்கு அவர் ஆயத்தமாகி வருகிறார் என்கிறார்கள்.

இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளின் போது 234 தொகுதிகளிலும் அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் பட்டினி தினத்தையொட்டி மக்கள் வயிறார சாப்பிட மதிய உணவை அளிக்க சொன்னார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி விருது நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள சட்டபேரவை தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை கவுரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ஆம் தேதி நடந்து முடிந்தது.
இதில் 1600 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் ஊக்கத்தொகையையும் சான்றிதழையும் வழங்கினார். இந்த நிலையில்தான் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடச்சாலை அமைப்பதாக அறிவித்தார். அதை காமராஜர் பிறந்தநாளான இன்று தொடங்கி வைக்கிறார். இந்த பாடச்சாலைக்கு படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை வைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ரசிகர்கள் தளபதி விஜய் பயிலகம் என வைக்க கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அவர் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவும் வரவேற்பும் எப்படி இருக்கிறது என பார்க்க போவதாகவும் தெரிகிறது. 2026 இல் கோட்டையில் விஜய் என்ற போஸ்டர்களை இப்போதே அவரது ரசிகர்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
-
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே!











Click it and Unblock the Notifications