விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.. என்ன காரணம்? தேமுதிக தந்த விளக்கம்
சென்னை: நடிகர் விஜயகாந்த் மீண்டும் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் செயல்பட்டார்.

இதற்கிடையே தான் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு சமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை தொடர்ந்து அவர் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தான் அவ்வப்போது நடிகர் விஜயகாந்த்துக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றார். விஜயகாந்த் பூரண குரணமடைந்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து டிசம்பர் 14ம் தேதி தேமுதிக சார்பில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். இதையடுத்து பொதுக்குழு, செயற்குழு தேர்வின் விஜயகாந்த் முன்னிலையில் அவரது மனைவி பிரேமலதா தேமுதிகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மாஸ்க் அணிந்து இருக்கையில் அமர்ந்து இருந்தார். அவர் வழக்கம்போல் பேசவில்லை. இருப்பினும் மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகமாகினர்.
இந்நிலையில் தான் தற்போது மீண்டும் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசி முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications