புருஷன்னு போன வருஷம் கூட... திமுகவுடன் கோர்த்துவிடுவதா? சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் காட்டம்!
சென்னை: தம்மை திமுக தூண்டிவிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போராட்டத்தின் போது பேசியதற்கு நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவை, என்னை, கருணாநிதியை தவறாக பேசுவதைத் தவிர வேறு எந்த ஒரு அரசியலுமே சீமானுக்கு தெரியாதா? எனவும் நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பேசிய சீமான், கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திமுகவையும் போலீசாரையும் கடுமையாக விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தக் கூடிய பாடலை 2 முறை பாடினார் சீமான்.
மேலும், அந்த "பெங்களூர்காரியை வைத்துக் கொண்டு 15 வருஷமா என்னென்னமோ செய்து பார்த்தது திமுக" என நடிகை விஜயலட்சுமி குறித்தும் சீமான் விமர்சனம் செய்தார். சீமான் தம்மை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி பிரளயத்தை கிளப்பி இருந்தார். கடந்த ஆண்டு கூட சென்னையில் முகாமிட்டு சீமானுக்கு எதிராக பரபரப்பைக் கிளப்பி இருந்தார் விஜயலட்சுமி. பின்னர் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி அவர் பெங்களூர் சென்றார். ஆனாலும் சீமானை தொடர்ந்து விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி.
இந்த நிலையில் நேற்றைய சென்னை பொதுக் கூட்டத்தில் தம்மை பற்றி சீமான் பேசியதால் உடனே விஜயலட்சுமி புதிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சீமானை ஒருமையில் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். மேலும் தம்மையும் திமுகவையும் கருணாநிதியையும் இழிவுபடுத்தி பேசுவதைத் தவிர வேறு அரசியலே சீமானுக்கு தெரியாதா? எனவும் விஜயலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அத்துடன் கடந்த ஆண்டு பிரச்சனையின் போது கூட என் கணவர் என்றுதானே ரூ. 50,000 கொடுத்தார் சீமான். அதை மறந்துவிட்டு சீமான் பேசலாமா? என கொச்சைவார்த்தைகளில் ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications