பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் லாரியில் அடிபட்டு சாவார் என சாபமிடுகிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்? என நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்கு தெரியும்; விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என அவருக்கு தெரியும்; நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள் எனவும் அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்-க்கு தங்கையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பலாத்கார குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி.

vijayalakshmi seeman tvk maanadu

விஜய் அண்ணனுக்கு சாபமா?: இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க? நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க?

உத்தமரா நீங்க?: நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு.. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும்.. கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க.. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க..

vijayalakshmi seeman tvk maanadu

பெண்கள் சீரழிப்பு: So கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா.. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல.... விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்?

ஆபாச வீடியோ வருதாமே?: முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க.. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க..

vijayalakshmi seeman tvk maanadu

கூமுட்டை மாதிரி.. : திமுகவுக்கு என்ன செய்யனும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாம காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.. ஓகேவா?

24 மணிநேரமும் நான் சாபம் விடுறேனே: ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க.. 24 மணிநேரமும் பெங்களூரில் இருந்து நான் உங்களுக்குதானே சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. அதனால கொள்கை ரீதியாக தவறு செய்தவங்க லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் செ.....ல அடிச்சே சாவீங்க. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+