ஸ்ட்ரெய்ட்டா சிஎம் தான்!? வி-சாலைக்கே வந்த தலைமைச் செயலகம்.. இறுதிக் கட்டத்தில் தவெக மாநாட்டு பணிகள்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நாளை விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தலைமைச் செயலகம் போல மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் மாநாட்டிற்கு தொண்டர்களும் விஜய்யும் வருவது தான் பாக்கி என்கின்றனர் உள்ளூர் நிர்வாகிகள்.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கியிருக்கிறார். பிப்ரவரி இரண்டாம் தேதி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்த நிலையில் நேற்று பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இதனால் அந்த கட்சியினர் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை ஆன நாளை நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கட்சியின் கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவிக்க இருக்கிறார். இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரான விஜய் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து கொள்கைகள் குறித்து அறிவிக்க உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மாநாட்டு முகப்பில் மணி என்பவருக்கு சொந்தமான 225 சதுர அடி நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து 100 அடி உயரம் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் ராம்ப் வாக்கில் நடந்து சென்று கட்சியின் கொடியை ஏற்றி வைக்கிறார். மேலும் மாநாட்டில் அதிக அளவு தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக தனியார் கம்பெனி சார்பாக செல்போன் டவர் ஒன்றை அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மாநாட்டின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டு நிகழ்வுகளை பார்ப்பதற்காக 600 பெரிய எல்இடி திரைகள், இரவிலும் பகல் போல காட்சி அளிக்க 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கு விஜய் ரசிகர்கள் , தொண்டர்கள், பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு பந்தலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், ஆகியோரது பேனர்களுடன் பிரம்மாண்ட கட் அவுட்டுகளுடன் விஜய், சேர சோழ பாண்டிய மன்னர்கள், தமிழன்னை, அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட் அவுட்களுக்கு இடையே விஜய்யின் கட் அவுட் என மாஸாக இருக்கிறது. தலைமைச் செயலகத்தின் மாதிரியில் மாநாட்டு முகப்பில் விஜய்யின் கட்சி கொடியில் இடம் பெற்றிருந்த இரண்டு யானைகள் கால்களை தூக்கிய படி அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மாநாட்டு முகப்பிலும் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், விஜய், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மன்னர்களின் படங்களும் அங்கே இடம்பெற்றிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் கொடியோடு வாகை மலரும் 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் வெற்றி கொள்கை திருவிழா என்ற வாசகம் தொண்டர்களை வரவேற்கிறது.
மாநாடு நாளை தான் என்றாலும் தற்போதிலிருந்தே ஏராளமானோர் அங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து போலீசாரும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாவலர்களும் மாநாட்டு திடலுக்குள் பொதுமக்களை அனுமதிக்கவில்லை. இருந்த போதும் அங்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications