Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில்வர், கோல்ட், டைமண்ட்.. மல்டி லெவல் மார்க்கெட்டிங்! சதுரங்க வேட்டை பாணியில் ஆள் சேர்க்கும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக முடித்த கையோடு தளபதி-69 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எம்எல்எம் பாணியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

actor vijay tamilaga vettri kazhagam chennai

இந்த நிலையில் அதற்கு பிறகாகவே கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அரசியல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் நடிகர் விஜய். குறிப்பாக சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட போகிறேன் என அவர் அறிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இது ஒரு புறம் இருக்க அவர் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய் சொன்னது போலவே அரசியலிலும் களம் இறங்கி விட்டார். தொடர்ந்து பல மாதங்களாக அரசியல் கட்சி தொடர்பாக ஆலோசனைகள் அறிக்கைகள் விட்டு வந்த விஜய் இறுதியாக அரசியலில் குதித்தே விட்டார். விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெற்ற மாநாடு பெரிய அளவில் விஜய்க்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்ததன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கான கூட்டணி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பூத் கமிட்டி அமைப்பது, மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்வது, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என விஜய் கட்சியில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும் கட்சியினரையும் விஜய் சந்திக்க இருக்கிறார். இதற்கு முன்னோட்டமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மாவட்டம் தோறும் சென்று ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே விஜய் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு மொபைல் அப்ளிகேஷன், மற்றும் இணையதளத்தை அறிமுகம் செய்திருந்தார். https://tvk.family/ என்ற இணையதளத்தில் உள் சென்றால் முதலில் உங்கள் தொலைபேசி எண் கேட்கும்.. உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்தவுடன் அதற்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டால் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டவுடன் உங்கள் பெயர், தொகுதி, மாநிலம் உள்ளிட்ட தகவல்கள் வரும். அது சரியாக இருக்கிறது என்றால், ஓகே செய்யலாம். பின்னர் நீங்கள் உறுப்பினராக சேர விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்படும். அதற்கு ஆம் என பதில் அளித்தால் உடனடியாக உங்களது உறுப்பினர் அட்டையானது வழங்கப்படும். அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் தற்போது மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் எம்எல்எம் பாணியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதாவது நீங்கள் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தவுடன் நீங்கள் சில்வர் மெம்பராக இருப்பீர்கள். உங்கள் பகுதியில் அதாவது உங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் நீங்கள் ஐந்து நபர்களை சேர்த்து விட்டால் கோல்டன் மெம்பராக பதவி உயர்வு அளிக்கப்படும்.

actor vijay tamilaga vettri kazhagam chennai

அதற்குப் பிறகு அவர்கள் மூலமாகவோ அல்லது நீங்களாகவோ 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்து விட்டால் டைமண்ட் உறுப்பினராக புரமோஷன் பெறுவீர்கள். அதற்கு மேலும் உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது உங்களுக்கு பிளாடினம் உறுப்பினராக புரமோஷன் அளிக்கப்படும். இவ்வாறு கோல்டன் அல்லது அதற்கு மேல் இருக்கும் உறுப்பினர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதை அடுத்து தமிழக வெற்றி கழகத்தில் பதவி பெற வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் தற்போது செல்போன் லேப்டாப் கையுமாக தங்கள் பகுதிகளில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார்களாம்.

தற்போதைய சூழலில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அடையாள அட்டையில் எந்தவித எண்ணோ, தனி அடையாள வரிசை எண் என எதுவுமே கிடையாது. எனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இத்தனை உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என தலைமை அறிவித்தால் மட்டுமே அதில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+