குறி வச்சா இரை விழனும்.. லிஸ்ட் போட்டு தூக்கும் விஜய்! பாரபட்சமில்லாமல் பேரம் பேசும் மாஜி.. இவருமா?
சென்னை: சமீபத்திய அரசியல் நிகழ்வுகளும் விவாதங்களும் தன்னை சுற்றியே இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். ஏற்கனவே பல கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவுக்கு வந்திருக்கும் நிலையில் மேலும் சில கட்சிகளில் இருந்து முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியானது நடைபெற்று வருகிறது. அதற்கான பலனும் கிடைத்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறது விஜய் தரப்பு.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தீவிர அரசியலில் குதித்து ஒரு வருடம் கடந்து விட்டது. இன்னும் ஒரு வருடத்தில் அரசியலில் முதல் பரிட்சையை எழுத தயாராகி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் விஜய் எதிர்கொள்ளும் முதல் தேர்தல்.

இதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் நேரடியாக இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி சில பகுதிகளில் வெற்றியும் பெற்றனர். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
2026 தனித்துப் போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கிடைத்திருக்கும் தகவல் படி அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேரலாம் என கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையா இல்லையா என்பது குறித்து விஜய் தரப்பு, அதிமுக தரப்பு பேசவில்லை. அதே நேரத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக, மாநகர், பேரூராட்சி, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது.
மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனமும் தற்போது நடைபெற்று வருகிறது. கட்சியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தனது முகம் மட்டும் போதாது என உணர்ந்துள்ள விஜய் வேறு கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகளையும் கட்சிக்குள் இழுக்க முயற்சித்து வருகிறார். அதன் பயனாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அதிமுகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், சில நடிகர்கள் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளனர்.
மேலும், துணை பொதுச் செயலாளர், துணை பொருளாளர், கொள்கை பரப்பு துணை செயலாளர் உள்ளிட்ட மாநில பொறுப்புகள் தருவதாக கூறி வேறு சில கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான மருது அழகுராஜ் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கின்றனர்.
மேலும் பல கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் மக்களுக்கு தெரிந்த முகங்களை கட்சிக்குள் இழுக்கும் முயற்சியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இளைஞர் அணி தலைவர் ஒருவரையும், காங்கிரஸ் கட்சியில் செல்வ பெருந்தகைக்கு எதிராக செயல்பட்டு வரும் சில முக்கிய தலைவர்களை கட்சிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் கட்சியில் சேர்வதற்கான சரியான நேரத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள், அதிமுகவின் ஒரு மூத்த முன்னாள் அமைச்சர், அவைத்தலைவராக இருந்த ஒரு நிர்வாகி உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குச் சென்ற ஒரு பெண் நிர்வாகி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி விஜய் தரப்புக்கு பல முக்கிய முகங்கள் தாவ இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இன்னும் சில நாட்களில் கட்சி இணைவு அறிவிப்புகள் அடுத்தடுத்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!











Click it and Unblock the Notifications