திமுக, பாஜக அரசுகளுக்கு கண்டனம்+ வரவேற்பு.. அனைத்தும் கலந்த கலவை விஜய் தவெக செயற்குழு தீர்மானங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்தான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு பல்வேறு கண்டனங்கள்,எதிர்ப்புகளை தெரிவித்த போதும் வரவேற்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது; அதேபோல மத்திய பாஜக அரசுக்கு வரவேற்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

திமுக அரசு எதிர்ப்பு தீர்மானங்கள்: திமுக அரசுக்கு எதிராக "ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்பமாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட உடனே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக அரசுக்கு எதிரான தீர்மானங்கள்: "மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு எங்கள் மருத்துவ கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும் இந்த விஷயத்தில் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது" எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு: அதேபோல ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும் அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள்; மக்களாட்சித் தத்துவத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பாஜக அரசின் இந்தச் சட்டத்தை இச்செயற்குழு கண்டிக்கிறது என்கிறது மற்றொரு தீர்மானம். அத்துடன் ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனைகளுக்கும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது இந்த செயற்குழு.

திமுக, பாஜக அரசுகளுக்கு பாராட்டு: இப்படி திமுக அரசையும் மத்தியில் பாஜக அரசையும் கடுமையாக கண்டித்தும் எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கடைசியாக 2 பாராட்டு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்கு. திமுக அரசின் தகைசால் விருது அறிவிப்பு மற்றும் தமிழ்நாட்டின் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்திய அரசின் முடிவு ஆகியவற்றுக்குதான் பாராட்டும் வரவேற்பும் தந்துள்ளன தவெக தீர்மானங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+