அந்த உண்மையை சொல்லுங்க.. சனாதனம்னா என்ன? 'மாமன்னன்' உதயநிதிக்காக 'ஜெயிலர்' வில்லன் விநாயகன் வாய்ஸ்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சனாதன ஒழிப்பு முழக்கம் சர்ச்சையில் 'ஜெயிலர்' திரைப்பட வில்லனாகிய நடிகர் விநாயகனும் இணைந்துள்ளார்.
சனாதனத்தை ஒழிப்போம் என்பதுதான் தமிழ்நாட்டின் 100 ஆண்டுகளுக்கும் மேலான திராவிடர் இயக்கத்தின் முழக்கம். வள்ளுவர் காலம் தொடங்கி இந்த முழக்கம் தொடருகிறது. ஆனால் லோக்சபா தேர்தலுக்கான பிரசார ஆயுதமாக கையில் எடுத்துள்ளது பாஜக. இதனால் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கிற பேச்சை இப்போதைக்கு பாஜக கைவிடுவதாக இல்லை.

இந்த சர்ச்சையில் நடிகர் விநாயகன் இணைந்துள்ளார். நடிகர் விநாயகன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், சனாதனம் என்கிறார்களே அது என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார். இதனடிப்படையில் டிவி சேனல் ஒன்று விநாயகனிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு விநாயகன் அளித்த பதில்: தர்மம் என்றால் என்ன என்பது நமக்கு தெரியும். சனாதனம் என்றால் என்ன?
விக்கிபீடியா, டிவி சேனல் ஆகியவற்றில் சனாதனம் பற்றி இரண்டு வரிதான் போட்டிருக்கிறார்கள். சனாதனம் என்பதன் உட்பொருள்தான் என்னவாம்? அதை யாருமே ஏன் சொல்லுவதில்லை?
சனாதனம் என்றால் என்ன? மாறாததா? அது சரி.. எது மாறாதது? அட அப்படி என்ன மாற்றம் இல்லாதது என்பதை சொன்னால் என்ன? மாற்றம் இல்லை என சொல்வது புரிகிறது.. ஆனால் நான் கேட்பது எது மாற்றம் இல்லாதது என்பதுதான்? அதாவது சனாதனத்தின் உட்பொருள் என்ன என்பதுதான் என் கேள்வியே.

சனாதனத்தில் உள்ள இதெல்லாம் மாற்றம் இல்லாதது என தெளிவாக சொல்லுங்களேன்.. அதை சொல்லிவிட்டு இதையெல்லாம் மாற்றக் கூடாது; நிலை நிறுத்த வேண்டும் என சொல்லவேண்டும். தர்மம் என்பதை எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம்.
சனாதனத்தின் பொருள் யாருக்கும் இப்போது தெரியவில்லை. டிவி மீடியாவில் சனாதனம் தொடர்பாக சர்ச்சை இடம்பெறுகிறது. ஆனால் சனாதனம் என்ன என்பது பற்றி எதுவும் சொல்வதில்லை. அதைத்தானே சொல்ல வேண்டும்? எது மாற்றம் இல்லாதது என்பதற்குதான் யாரிடமும் பதில் இல்லை.
இதைப்பற்றி கேட்டால் யாரும் சனாதனம் பற்றி பேசவே கூடாது என சொல்கின்றனர். எவ்வளவு புத்திசாலியாக செயல்படுகிறார்கள் பாருங்க.. இதெல்லாம் நல்லா தெரிஞ்ச சமஸ்கிருதம் படிச்ச ஆள்கிட்ட விசாரித்து சனாதனம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். விநாயகனா இருப்பது விநாயக தர்மம் போல சனாதனமாக இருப்பது சனாதன தர்மம் போல. அதான்யா என்ன சனாதன தர்மம் என்று கேட்டால் சொல்லவே மாட்டேன் என்கிறார்கள்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications