ஏன் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டேன்னா.. நடிகர் விவேக்கின் பேச்சு வைரல்!
சென்னை: தனியார் மருத்துவமனையில் போட்டுக் கொள்ளாமல் அரசு மருத்துவமனையில் தான் ஏன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதை விளக்கிய விவேக்கின் வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விவேக் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஊடக பெருமக்களுக்கு எனது அன்பான காலை வணக்கம். நான் மாஸ்க்கை எடுக்கக் கூடாது, அதனால் மாஸ்க் போட்டுக் கொண்டே பேசுகிறேன்.
இன்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரியின் டீன் திருமதி ஜெயந்தி, கோவிட் பிரிவுக்கு பொறுப்பாளரான டாக்டர் ரமேஷ் , மல்டி ஸ்பெஷாலிட்டிக்கு பொறுப்பாளரான டாக்டர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.

மருத்துவமனை
எனது நண்பர்களும் போட்டுக் கொண்டார்கள். இந்த ஊசியை தனியார் மருத்துவமனையில் நான் ஏன் போடவில்லை, அரசு மருத்துவமனையில் ஏன் போட்டுக் கொள்கிறேன் என்ற கேள்வி வரும். அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பாலான மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சென்று சேருகின்ற மருத்துவ சேவை செய்து வருகிறது.

வதந்திகள்
அதனால் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாமா, இல்லை வேண்டாமா, இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என மக்களிடையே பலவிதமான வதந்திகள் உலவுகின்றன. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டும். இந்த ஊசியை போட்டதால் எந்தவித ஆபத்தும் கிடையாது, நமக்கு பாதுகாப்பு உண்டு என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவே நான் அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொண்டேன்.

சமூக இடைவெளி
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற மாநிலங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நம் தமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு சமூகபாதுகாப்பு என்பது இந்த முகக் கவசமும் கையை அடிக்கடி கழுவுவதும் சமூக இடைவெளியும்தான்.
|
உயிரை பாதுகாக்கும்
ஆனால் மருத்துவ ரீதியான பாதுகாப்பு தற்போது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது இந்த கொரோனா தடுப்பூசிதான். இது தவிர நிறைய பேர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், விட்டமின் சி, ஜின்க் மாத்திரை உள்ளிட்டவற்றை மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இதெல்லாம் சரிதான். இவையெல்லாம் கூடுதல் பாதுகாப்பு. அரசு மூலமாக வரும் தடுப்பூசிதான் உங்கள் உயிரை பாதுகாக்கும் என விவேக் பேசியிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications