Actor Vivek: தகனமேடையில் தந்தையை தொட்டு பார்த்து அழுத மகள்.. கற்பூரம் ஏற்றி இறுதி சடங்கு செய்தார்!
சென்னை: தகனமேடையில் விவேக்கின் உடலை தொட்டு பார்த்து அழுத மகள், கற்பூரம் ஏற்றி இறுதி சடங்குகளை செய்த சோகம் நடந்துள்ளது.
சின்ன கலைவாணர், சனங்களின் கலைஞன் என அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக் (59). இவருக்கு நேற்றைய தினம் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நிலையில் வடபழனி சிமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்ட அபாய கட்டத்தில் இருப்பதாகவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவரது உயிர் இன்று அதிகாலை பிரிந்தது.

பத்மாவதி நகர்
இதையடுத்து விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு விவேக்கின் உடல் கொண்டு வரப்பட்டது. காலை முதல் திரைத்துறையினர், நண்பர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

ஊர்வலம்
இதையடுத்து மாலை 4 மணிக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக மேட்டுகுப்பத்தில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாலையின் இரு மருங்கிலும் மக்கள் குவிந்தபடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மரக்கன்றுகள் பல ரசிகர்கள், இளைஞர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இறுதி சடங்குகளை செய்த மகள்
மின் மயானத்தில் நடிகை ரேகா, டிவி நடிகை நிலானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. பின்னர் உள்ளே கொண்டு வரப்பட்ட விவேக்கின் உடலுக்கு மகள் தேஜஸ்வினி இறுதி சடங்குகளை செய்தார்.

இளைய மகள்
மகன் இல்லாத நிலையில் அவரது இளைய மகள் அணிந்திருந்த உடையின் மீது வேட்டியை கட்டிக் கொண்டு இறுதி சடங்குகளை செய்தார். தகனமேடையில் வைக்கப்பட்ட விவேக்கின் முகம் மூடப்பட்ட நிலையில் அவரது உடலை தொட்டு பார்த்த தேஜஸ்வினி அழுதார்.

கற்பூரம் ஏற்றிய மகள்
அவரை நடிகை நிலானி தேற்றினார். பின்னர் அவரது உடலுக்கு சந்தன கட்டைகள் வைத்து நெய்யை ஊற்றினார். இதையடுத்து கற்பூரத்தை வைத்து ஏற்றினார். அப்போது தேஜஸ்வினி கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது. விவேக்கின் உடல் எரிந்து கொண்டே மெஷினி மூலம் உள்ளே சென்றது. அதை பார்த்து துக்கம் தாளாமல் அழுத தேஜஸ்வினியை கட்டி அணைத்தபடி நடிகை நிலானி ஆறுதல் கூறி அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications