வானிலை அறிவிப்பாளர் காணாமல் போனவர் அறிவிப்பை வாசித்தால்.. வைரலாகும் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி
சென்னை: மறைந்த சனங்களின் கலைஞன் நடிகர் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி குறித்த வீடியோவை எக்ஸ்னோரா நிர்மல் வெளியிட இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் விவேக் சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த நடிகர் விவேக் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

எக்ஸ்னோரா நிர்மல்
நடிகர் விவேக் தொடர்பான இதுவரை அறியப்படாத ஆச்சரியமூட்டும் தகவல்களை அவரது நண்பர்கள் பலரும் பகிர்ந்து வருகிண்றனர். எக்ஸ்னோரா அமைப்பின் தலைவரான நிர்மல், நடிகர் விவேக் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்னதாக முதன் முதலில் அவரை மேடையேற்றியது தொடர்பாக விவரித்திருக்கிறார். அத்துடன் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி வீடியோவையும் நிர்மல் வெளியிட்டுள்ளார்.
ஹ்யுமர் கிளப் மூலமாக..
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எக்ஸ்னோரா நிர்மல் பதிவு செய்துள்ளதாவது: விவேக்.. முதன் முதலில் ஒரு 27 வயது இளைஞராக ஹ்யுமர் கிளப் கூட்டத்தில் மிமிகிரி Mimicry )செய்வதை பார்த்து நான் தலைமை மேலாளராக பணிபுரிந்த வங்கி நிகழ்ச்சியில் அழைத்திருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு கலாகேந்திரா கோவிந்தராஜன் அவர்களையும் அழைத்திருந்தேன்.

விவேக்கின் மிமிக்ரி நிகழ்ச்சி
விவேக் அவர்களுக்கு சென்னையில் அதுதான் முதல் மேடை. அவர் mimicryக்கு ஏக கைதட்டல் வரவேற்பு.. அதுவே அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தத்து. கலாகேந்திரா கோவிந்தராஜன், கலாகேந்திரா K பாலச்சந்தரிடம் அழைத்து செல்லவும் பிறகு சரித்திரம் ஒன்று உருவாகியது. அதை விவேக்கே கூறியுள்ளார். நம்மை மகிழ்வித்த விவேக் இன்று இல்லை. சரித்திரத்தில் அவர் என்றும் வாழ்வார் இவ்வாறு எக்ஸ்னோரா நிர்மல் பதிவு செய்துள்ளார்.

வானிலை அறிவிப்பாளர் மிமிக்ரி
விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சியானது, ரேடியோ ஒன்றில் வானிலை அறிவிப்பாளர் ஒருவர் காணாமல் போனவர் குறித்த அறிவிப்பை வாசித்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றிய மிமிக்ரி. விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி என்று சொல்ல முடியாத அளவுக்கு அடேங்கப்பா! என அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார் அந்த நிகழ்ச்சியில்.. இதுதான் அந்த நிகழ்ச்சி:












Click it and Unblock the Notifications