பார்ட்டியில் போதைப்பொருள்.. கம்பி எண்ணும் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! நாளை முக்கியம்.. ஜாமீன் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகியிடம் இருந்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக பிரதீப் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் பிரமுகர் ஆன பிரசாத் என்பவரிடம் போதை பொருள் வாங்கியதாக கூறினார்.

இதை அடுத்து பிரசாத்தை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல திரைப்பட நடிகர்கள் போதைப்பொருள் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 40 முறை போதை பொருளை விற்றதாக கூறினார்.

Actors Srikanth Krishna high court

இதை அடுத்து ஸ்ரீகாந்தை அழைத்து வந்த போலீசார் அவரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்பினார். அதில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் யார் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதை அடுத்து கழுகு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா மீதும் போலீசாரின் பார்வை விழுந்தது.

அவர் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவராகவே விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதர்கிடையே நுங்கம்பாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் முன்னிலையில் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் ஆஜர் ஆனார். இதை அடுத்து கிருஷ்ணாவிடம் போலீசார் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார்.

நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு வந்தபோது தனக்கு ஏராளமான உடல்நலக் கோளாறு இருப்பதாகவும், தான் போதைப் பொருள் பயன்படுத்த முடியாது என்பதற்கான மருத்துவ ஆதாரங்களை சமர்ப்பித்தார். இருந்த போதும் கிருஷ்ணாவின் செல்போனில் இருந்த ஆதாரங்களை வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், இரு நாட்கள் கழித்து 26 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, கெவின் ஆகியோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சென்னை போதைப் பொருள் கடத்தல் சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. நீதிபதி நிர்மல் குமார் முன் இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிலையில் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+