Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. 4 பேரை காவலில் எடுத்தது போலீஸ்! அதிரடி விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் 4 பேருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் சப்ளை செய்த பிரசாத், ஜான் உள்பட 4 பேரிடமும் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா அடுத்தடுத்து கைதானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

Srikanth drug case cinema

4 பேருக்கு போலீஸ் காவல்

இதில் ஏற்கனவே போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், கானாவை சேர்ந்த ஜான், கெவின் மற்றும் சேலத்தை சேர்ந்த பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அவர்களிம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணாவை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், போதைப் பொருள் சப்ளை செய்த 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று பிரசாத், ஜான், பிரதீப் குமார், கெவின் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி அவர்கள் 4 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி உத்தரவிட்டது.

விசாரணையை தொடங்கிய போலீசார்

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் மேலும் பலர் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மூன்றெழுத்து நடிகர், நான்கெழுத்து இசையமைப்பாளர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகன பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில் இந்த விசாரணை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

போதைப் பொருள் வழக்கு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 'கொக்கைன்' போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம், சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது அவருக்கு ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் கொகைன் போதைப்பொருளை சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். ஓசூரில் கைது செய்யப்பட்ட ஜானை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்று விசாரித்தபோது, நடிகர் ஸ்ரீகாந்த் பெயரை அவர் கூறினார். இதன்பின்னர் கடந்த 22 ஆம் தேதி ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வர வைத்து விசாரணை செய்தனர். இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

கேட்டு வாங்கினார்

தடை செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரசாத்திடம் அடிக்கடி கொக்கைன் வாங்கி வந்ததாகவும் குறிப்பாக மூன்று முறை அவராகவே கொடுத்ததகவும் கூறினார். சம்பள பாக்கி தொகைக்காக கொக்கைன் கொடுத்த நிலையில், அதை பயன்படுத்திய ஸ்ரீகாந்த், அதற்கு அடிமையாக நான்காவது முறையாக தானே கேட்டு வாங்கியதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல, துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஸ்ரீகாந்த், அன்று இரவே தனது வீட்டில் பார்ட்டி நடத்தியிருக்கிறார். அந்த பார்ட்டியில் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார். ஸ்ரீகாந்த் வீட்டில் நடந்த பார்ட்டியில் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்தே வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுதுத்து தான், கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+