ஸ்டாலினுக்கு விஜய் மேல பாசம் இருக்கு.. அதான் சும்மா விட்டு வைத்துள்ளார்.. விளாசிய நடிகை ஆர்த்தி
சென்னை: 75 வருஷம் அரசியல் தெரிஞ்ச அண்ணன் ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் மேல் ஒரு பாசம் இருக்கிறது. அதனால் தான் அவர் எது சொன்னாலும் ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிறார்.. குழந்தை மாதிரி நீ எனக்கு என நினைத்து ஸ்டாலின் சார் விட்டுவிட்டார் என நடிகை ஆர்த்தி திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார்.
மேலும், "நான் யார் கிட்டேயும் பேசவே மாட்டேன்.. ஆனால் என் முகத்தை பார்த்தே ஓட்டு போட வேண்டும் என்று சொன்னால் எப்படிங்க முடியும்.." எனவும் விஜய்யை விமர்சித்து பேசினார்.
திமுகவிற்கு ஆதரவாக நடிகை ஆர்த்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அவர் கூறியதாவது:-

சட்டசபையில் டான்ஸ் ஆட முடியாது
ஒருத்தர் நேற்று கட்சியை ஆரம்பித்து, நாளைக்கு சிஎம் ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகர். நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று தெரிகிறதா?.. உங்களுக்கு தெரியுமா?.. எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவருடன் சுமார் 3 படம் நடித்து இருக்கிறேன்.. நல்லா டான்ஸ் ஆடுவார்.. அவரைப் போல டான்ஸ் ஆடுவதற்கு தமிழ்நாட்டில் வேறு யாரும் கிடையாது.
ஆனால் சட்டசபையில் போய் டான்ஸ் ஆடவேண்டும் என்றால் அவரை நாம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது வேலை இல்லை அல்லவா.. பிறகு நம்ம வாழ்க்கை எல்லாம் ஆட்டம் கண்டுவிட கூடாது.. ஏனென்றால் நம்மளால் அவர் போடும் டியூனுக்கு ஆட்டம் போட முடியாது. காலையிலே 7 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்து மாலையில் 6 மணிக்கு முடிந்துவிடும் சினிமா. ஆனால் அரசியலில் அப்படி காலையில் 7 மணிக்கு வந்துவிட்டு மாலையில் 6 மணிக்கு வீட்டுக்கு போகனும்னு நினைக்கக் கூடாது.
அகங்காரமா? இல்லை அனுபவமா?
நான் யார் கிட்டேயேயும் பேசவே மாட்டேன்.. ஆனால் என் முகத்தை பார்த்தே ஓட்டு போட வேண்டும் என்று சொன்னால் எப்படிங்க முடியும்.. இங்கே 75 வருஷமாக கட்சியை நடத்தி 24 மணி நேரமும் அரசியல் பணி செய்கின்ற எங்கள் அண்ணா ஸ்டாலின்.. ஆனால் அவர் ஸ்டாலின் சார் வேண்டுமா இல்லை நான் வேண்டுமா என கேட்கிறார்.. அகங்காரத்திற்கும் அனுபவத்திற்கும் நாம் போடப்போகிற வாக்கு தான் வரும் 23 ஆம் தேதி போடப்போறோம்.
அவர் இப்போதான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து இருக்கார் அரசியலில்.. இன்னும் ராக்கெட் வரை ஓட்டனும். ஆனால் டைம் ஆகும் அதற்கு.. அரசியல் கத்துக்கொண்டு வரட்டும். வரவேண்டாம் என்று சொல்லவில்லை. இப்போ அதற்கான டைம் கிடையாது. ஏனென்றால் நம் மக்கள் வாழ்க்கையை அவரிடம் பனையம் வைக்க முடியாது. நீங்க யாராவது ஆபரேஷனே பண்ண தெரியாத டாக்டரிடம் போய், நேற்று தான் கவுரவ டாக்டர் பட்டம் படித்து இருக்கிறேன் என்று சொல்பவரிடம் போய் ட்ரீட்மெண்ட் பண்ணப் போவிங்களா.. போக மாட்டீங்க..
விஜய் ஒரு குழந்தை என விட்டுவிட்டார்
டிரைவிங்கே தெரியாம நேற்று தான் எல்.எல்.ஆர் எடுத்து இருக்கிறேன் என்பவரிடம் வண்டியில் போய் நீங்க தைரியமா உக்காருவீங்களா.. போக மாட்டோம்.. அனுபவம் உள்ள மருத்துவர், அனுபவம் உள்ள டிரைவரிடம் தான் போவோம்.. ஒரு சின்ன பயணத்திற்கே நாம் இதை எதிர்பார்க்கும் போது, 5 வருஷம் ஆட்சி.. அரசியலே தெரியாதவரிடம் எப்படி நாட்டை கொடுக்க முடியும். நடிகர் தான். 50 வருஷம் நடிப்பு மட்டுமே தெரிந்த நபருக்கு அரசியல் ஆசை..
ஆனால் இது 75 வருஷம் அரசியல் தெரிஞ்ச அண்ணன் ஸ்டாலினுக்கு நடிகர் மேல் ஒரு பாசம் இருக்கிறது. அதனால் தான் அவர் எது சொன்னாலும் ஒன்னுமே சொல்ல மாட்டுக்கிறார்.. குழந்தை மாதிரி நீ எனக்கு என நினைத்து ஸ்டாலின் சார் விட்டுவிட்டார். ஆனால் மக்கள் ஆகிய நாம தான் புரிஞ்சி நடந்துகொள்ள வேண்டும். நம்ம நல்லா இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றால் திமுக வர வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications