நடிகையால் பிரச்சனை.. விவாகரத்து வழக்கில் விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கட்சி ஆரம்பித்த 3 ஆண்டுகளுக்குள் விஜய் ஆட்சியமைத்து முதலமைச்சராகியுள்ளார். சினிமாவிலும், குடும்பத்திலும் அவர் பல்வேறு பிரச்சனைகள், சவால்களை எதிர்கொண்டார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமானபோது விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தற்போது சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் அப்போது விஜய் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். அது என்ன என்று தெரியுமா?.

முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல்கட்ட விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கணவன், மனைவி இருவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் பிரச்சாரம் என்பதால் அப்போது விஜய் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். ஜூன் 15 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Vijay Divorce Case

பிறகு வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது சங்கீதா விவகாரத்து வழக்கை வாபஸ் பெற்றார். முன்னதாக சங்கீதா தாக்கல் செய்த விவகாரத்து வழக்கில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில், "எங்கள் இல்லற வாழ்க்கை சுமூகமாக தான் இருந்தது. சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை நாங்களே சமாதானப்படுத்தி வாழ்ந்து வந்தோம். 2021 ஏப்ரல் மாதம் என் கணவருக்கும், ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.

அந்த உறவை துண்டித்துவிடுவதாக கணவர் கூறினார். உறுதியளித்தபடி அவர் நடந்து கொள்ளவில்லை. நடிகையுடன் அவர் தொடர்பில் இருந்தார். பிரச்சனையை சரி செய்வதற்கு எடுத்த முயற்சிகள் கைக்கொடுக்கவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி அமைதியாக இருந்தேன். என்னுடனான தொடர்பை கணவர் விஜய் முற்றிலும் துண்டித்துவிட்டார். இதனால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். தனிமையில் வாடினேன். மனைவி என்கிற அடிப்படையில் குடும்பம் நடத்த அவர் அளித்து வந்த நிதியை முற்றிலும் நிறுத்தினார்.

தற்போது எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. ஒருகட்டத்தில் வீட்டிற்குள்ளும் என்னை அனுமதிக்கவில்லை. இதனால் நாங்கள் தனித்தனியாக வசித்து வருகிறோம். உறவை கண்டுபிடித்தும் இரக்கமில்லாமல் தொடர்ந்தார். இப்போது ஒட்டு உறவு இல்லாததால் எங்களுக்கு விவகாரத்து பெற்று தர வேண்டும். நீலாங்கரை வீட்டில் எனக்கு சரிபங்கு உரிமை வேண்டும்" என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+