பீரியட்ஸ் நேரத்தில்தான் இதையெல்லாம் சொல்வாங்க! இயக்குநரிடம் நோ சொல்லிடுவேன்.. நடிகை அஞ்சலி
சென்னை: பீரியட்ஸ் நேரத்தில்தான் இயக்குநர்கள் அதையெல்லாம் சொல்வார்கள் என நடிகை அஞ்சலி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை அஞ்சலி கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் 2007ஆம் ஆண்டு ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக இவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார்,

அது போல் 2010ஆம் ஆண்டு அங்காடித் தெரு என்ற படத்திலும் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். தனது நடிப்பு திறன் மூலம் தேவையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் இதுவரை 18 படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தனது சித்தி கொடுமை செய்வதாக இவர் பகீர் புகார் அளித்திருந்தார். தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துகளை சித்தி பாரதி தேவி அபகரித்துவிட்டதாகவும் அவர் புகார் கூறிய நிலையில் தனது உயிருக்கு ஆபத்து என்றும் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது தங்கை அஞ்சலியை காணவில்லை என்றும் அவர் காணாமல் போனதற்கு சித்தி பாரதி தேவிதான் காரணம் என்றும் அவருடைய அண்ணன் ரவிசங்கர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அஞ்சலி தனது அண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை யாரும் கடத்தவில்லை.
சித்தப்பா சூரி பாபு என் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்ததால் நான் ஹோட்டலை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன். என்னை பற்றி கவலைப்படாதே, என்னை காணவில்லை என கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிடு. சித்தி பாரதி தேவி மீது கொடுத்த புகாரை மட்டும் அப்படியே வைத்துவிடு, திரும்பி வாங்காதே என கூறியிருந்தார்.
அது போல் இவர் நடிகர் ஜெய்யை காதலித்ததாகவும் செய்திகள் வந்தன. அது போல் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானதாகவும் சொல்லப்படுகிறது. இதை அஞ்சலி மறுத்தார். வெப்சீரிஸில் ஒன்றில் நடித்து வரும் அஞ்சலி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: பொதுவாகவே ஒவ்வொரு பெண்களுக்கும் பீரியட்ஸ் நேரத்தில் பல வகையான வேதனைகள் ஏற்படும். அடி வயிற்றில் வலி இருக்கும். உடல் வலி இருக்கும். எனக்கு எப்போதெல்லாம் பீரியட்ஸ் நேரம் வருகிறதோ அப்போதுதான் மழையில் நனைந்தபடி நடிக்கச் சொல்வார்கள்.
ஈரமான உடைகளை அணிய சொல்வார்கள். மிகவும் மகிழ்ச்சியான காட்சிகளில் நடிக்கச் சொல்வார்கள், ஆனால் நமக்கு வலி இருக்கும். அத்துடன் கடினமான டான்ஸ் மூவ்மென்ட்டுகளை எல்லாம் செய்ய சொல்வார்கள். எனக்கு ஒரு விதமாக கடுப்பாக இருக்கும். அதனால் என்னுடைய பீரியட்ஸ் நேரங்களில் இயக்குநர்களிடம் இப்படிப்பட்ட காட்சிகளை வைக்கக் கூடாது என சொல்லிவிடுவேன். இவ்வாறு அஞ்சலி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications