3 முறை கருவுற்றேன்.. கட்டாயப்படுத்தி கலைத்தார் மணிகண்டன்.. காப்பர் டி போடவைத்தார்.. குமுறிய சாந்தினி

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் மணிகண்டனால் நான் 3 முறை கருவுற்றேன்.. மூன்று முறையும் என்னை கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்ய வைத்தார். அபார்ஷனுக்கு பிறகு, காப்பர்-டியை போட வலியுறுத்தினார்.. அதற்கு பிறகு என்னிடம் சந்தோஷமாக இருந்து வந்ததால் எனக்கு பலமுறை உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. நான் குளிக்கும்போது, எனக்கே தெரியாமல் டிரஸ்ஸே இல்லாத ஒரு போட்டோவை எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி வைத்து மிரட்டுகிறார்" என்று துணை நடிகை சாந்தினி மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது புகார் தந்துள்ளார்.

Recommended Video

    அதிமுக முன்னாள் அமைச்சர் Manikandan மீது நடிகை Shantini Deva பாலியல் புகார்

    முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது, துணை நடிகை சென்னை போலீசில் புகார் தந்துள்ளார்.. அந்த மனுவில் அவர் சொல்லியுள்ளதன் விவரம் இதுதான்:

    "நான் மலேசியா குடியுரிமை பெற்ற பெண்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. சென்னையில் 2017-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன்... நான், மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த போது அடிக்கடி என் வேலை விஷயமாக இந்தியா வந்து செல்வது வழக்கம்.

     மணிகண்டன்

    மணிகண்டன்

    அப்படித்தான், கடந்த 2017-ல் வந்தபோது, அதிமுக அமைச்சராக இருந்த அமைச்சர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்பவர் என்னிடம் சொன்னார்.. அதனால் நான் அமைச்சரின் இல்லத்தில் 3.5.2017-ல் நேரில் சந்தித்து பேசினேன்.

     செல்போன்

    செல்போன்

    மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாகவும் அந்த தொழில் முதலீடு சம்பந்தமாக நாம் இருவரும் கலந்து பேச வேண்டும் என்று சொல்லி என்னுடைய செல்போன் நம்பரையும் வாங்கி கொண்டார்.. அன்னைக்கு சாயங்காலம் முதலே என்னிடம் பேச ஆரம்பித்தார். அடுத்த சில தினங்களில் என்கிட்ட தனிப்பட்ட முறையில் மணிகண்டன் பேச ஆரம்பித்தார்.

     கல்யாணம்

    கல்யாணம்

    நான் இருக்கேன்னு சொன்னார்.. என்னை அவருக்கு பிடித்து விட்டதாகவும், என்னையே கல்யாணம் செய்து கொள்வதாகவும் சொன்னார்.. ஏனென்றால், அவர் குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லையாம்.. மனைவி ஒரு கொடுமைக்காரியாம்.. என்னை போல ஒரு அழகான பெண் வாழ்க்கையில் கிடைத்தால், அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என்றார்.. என்னை காதலிப்பதாக சொன்னார். காதலை நான் மறுத்தேன்.. ஆனால், அவர் என்னை சட்டப்படி கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி தந்தார்.

    டிரைவர்

    டிரைவர்

    அவர் வார்த்தையை நம்பி, இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்... சென்னையில் அவர் இருந்தால் நைட் நேரத்தில் என்னுடன்தான் தங்குவார்... நான் எங்கு வெளியில் போக வேண்டுமென்றாலும், அமைச்சருடைய காரை தான் பயன்படுத்துவேன்... அப்போ அவர் டிரைவர்தான் எனக்கு கார் ஓட்டுவார். நாங்க இப்படி ஒன்றாக வாழ்வது நான் குடியிருக்கும் வீட்டு பகுதியில் அனைவருக்கும் தெரியும்.

     திருநெல்வேலி

    திருநெல்வேலி

    நாங்க, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி, திருநெல்வேலி, டெல்லி தமிழ்நாடு இல்லம், என இப்படி பல இடங்களுக்கு சென்று வந்துள்ளோம்... 2019-ல் சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

    கோபாலபுரம்

    கோபாலபுரம்

    கல்யாண பேச்சை நான் எடுக்கும்போது, மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை முறைப்படி திருமணம் செய்வதாக சொன்னார்.. அதுமட்டுமல்லாமல் அவர் என் வீட்டிற்கு வந்து தங்கி சென்றதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது... அவரால் நான் 3 முறை கருவுற்றேன்.. ஆனால், கல்யாணம் செய்தபிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.. அதனால், மூன்று முறையும் அவருடைய நெருங்கிய நண்பரின் கோபாலபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் என்னை கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்ய வைத்தார்.

     செக்யூரிட்டி

    செக்யூரிட்டி

    கடந்த 2019-ல் 3வது முறையாக கருவுற்றபோது, அவர் அப்போது அமைச்சராக இல்லை.. நான் அவர் வீட்டுக்கு திருமணம் செய்ய வற்புறுத்தி என் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த சம்பவம் அவருடைய செக்யூரிட்டிக்கு தெரியும்.. அபார்ஷனுக்கு பிறகு, காப்பர்டியை போட வலியுறுத்தினார்.. அதற்கு பிறகு என்னிடம் சந்தோஷமாக இருந்து வந்ததால் எனக்கு பலமுறை உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

     கல்யாண பேச்சு

    கல்யாண பேச்சு

    அப்போதுகூட என்னை கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.. நான் என் வருங்கால கணவர் என்ற முறையில் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டேன். கல்யாண பேச்சை எடுத்தால், 2 முறை அடித்து என் கண்களை சேதப்படுத்தினார்.. அதற்கும் நான் சிகிச்சை பெற்றிருக்கிறேன். கடைசியாக 2020, மார்ச் மாதம் என்னை திருமணம் செய்வதாக கூறினார்...

     ஊரடங்கு

    ஊரடங்கு

    அப்போது லாக்டவுன் போட்டுவிட்டதால், அவருடைய சொந்த ஊருக்கு போய்விட்டார்.. சென்னைக்கு வரமுடியவில்லை என்று காரணம் சொன்னார். நானும் என் அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்ற தகவல் வந்ததால், ஆகஸ்ட் மாதம் மலேசியா சென்று விட்டேன்.. டிசம்பர் மாதம்தான் மறுபடியும் தமிழகம் வந்தேன்... மறுபடியும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தேன்..

    மிரட்டல்

    மிரட்டல்

    கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை என்னுடன் வாழ்ந்து வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவருடைய சொந்த ஊருக்கு சென்ற பிறகு திடீரென என்னை மிரட்ட ஆரம்பித்தார். நான் ஏன் இவ்வாறு திடீரென்று மிரட்டுகின்றீர்கள் என்று கேட்டேன்.. "ஒழுங்கா, நீ உன் சொந்த நாட்டிற்கு போய்டு, இல்லாவிட்டால், எல்லா அரை நிர்வாண படங்களையும் இன்டர்நெட்டில் போட்டுவிடுவேன் என்றார்.

     வீடியோ

    வீடியோ

    நான் குளிக்கும்போது, எனக்கே தெரியாமல் டிரஸ் இல்லாத ஒரு போட்டோவை எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பினார்... உடனே நான் அந்த போட்டோவை டெலிட் செய்ய வற்புறுத்தினேன்... என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நான் அந்த போட்டோவை ஸ்கீரின் ஸ்டார்ட் எடுத்து வைத்துள்ளேன்... நான் எப்போது போன் பண்ணாலும் எடுப்பதில்லை.. பரணி என்பவர் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

     கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    பண மோசடி வழக்கு பதிவு செய்ய போவதாக மிரட்டுகிறார்.. அவருக்கு தெரிந்த ரெளடிகளை வைத்து என்னை கொலை செய்து விடுவதாகவும் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே என் மனுவை விசாரித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+