சித்ராவுக்காக.. கையையே வெட்டிக் கொண்டாரா ஹேமந்த்.. தீராக்காதலின் உச்சமா.. கசிந்து வரும் தகவல்..!
சித்ராவின் வாழ்க்கை இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது
சென்னை: சித்ராவின் மரணம் தற்கொலைதான் என்று முடிவான பிறகும், அவரை பற்றின பல தகவல்கள் கசிந்து வருகிறது.. குறிப்பாக சித்ரா மீது ஹேமந்த் வைத்திருந்த காதலின் தீவிரம் பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
"முல்லை" கேரக்டரில் நடிக்கும்போது, கணவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், முத்த காட்சிகள் எடுக்கப்பட்டதில் ஹேமந்துக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கிறது.. பொஸசிவ் காரணமாக தகராறும் வெடித்துள்ளது.. இப்படிப்பட்ட சமயத்தில்தான், இவர்கள் பதிவு திருமணம் செய்துள்ளனர்.. அதுதான் ஏன்? என்பது கேள்வி.

ஜனவரி மாதம் வீட்டில் பெரியோர்களால் கல்யாணத்துக்கு நாள் குறித்த நிலையில், இவர்கள் அவசர அவசரமாக ஏன் ரிஜிஸ்தர் செய்து கொண்டனர்.. இந்த பதிவு திருமணத்தில் முல்லையின் அம்மாவுக்கு உடன்பாடு இல்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.. அப்படியானால், கணவன்-மனைவி உறவை உறுதியாக பலப்படுத்தி கொள்ள, இவர்களை தூண்டியது எது? என்பதும் கேள்வியாக உள்ளது.
முல்லை கேரக்டர் தந்த பாதிப்பினால் இந்த திருமணம் நடந்ததா? அதையொட்டியே இவர்களிடையே தகராறு அதிகமானதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.. இதனிடையே, இவர்களின் திருமணம் குறித்து மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.. கொரோனா காலத்தில், வீட்டுக்குள் முடங்கி போய் இருந்த சமயம், சித்ராவுக்கு ஹேமந்துடன் காதல் மலர ஆரம்பித்துள்ளது.. அதனால், சித்ராவின் வீடு தேடி வந்து ஹேமந்த்தான் பெண் கேட்டிருக்கிறார்.. அதன்படிதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ஆனால், இதற்கு பிறகு இவர்கள் 2 பேருக்கும் நடுவில் நிறைய தகராறுகள் வந்து போயுள்ளன.. அப்படி ஒருமுறை வந்த தகராறில்தான், ஹேமந்த் தன் கையையே வெட்டி கொண்டாராம்.. இதை பார்த்து பதறிபோன சித்ரா, ஹேமந்த்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருக்கிறார்... இது பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமுக்கும் நன்றாக தெரியுமாம். இந்த சம்பவத்துக்குப் பிறகு தான் 2 பேரும் அவசரமாக பதிவு திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பதிவு திருமணத்துக்கு பிறகும், சண்டைகள் தொடர்ந்ததால், ஒருகட்டத்தில் கல்யாணத்தில் மிகுந்த குழப்பமாகி, நிறுத்திவிடலாமா என்றும் சித்ரா யோசித்து வந்துள்ளார்... ஷூட்டிங்கிற்கு கூடவே அழைத்து சென்ற போதிலும், சித்ராவுடன் ஹேமந்த் நன்றாகத்தான் பேசி கொண்டிருந்தாராம்.. அவர்களுக்குள் பிரச்சனை போலவே தெரியவில்லையாம்.. இப்போதுவரை ஹேமந்த் மீதான சந்தேகம் விலகவில்லை என்றாலும், சித்ராவை அவர் நேசித்து, அதன் உச்சக்கட்டமாக கையை அறுத்து கொண்ட தகவல் தற்போது கசிந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications