தேர்தல் டைம்ல நடந்த சம்பவம்! கவுதமி லெட்டர்ல இதை கவனிச்சீங்களா? வானதி வேற! அண்ணாமலைக்கு நெருக்கடி
சென்னை: நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அண்ணாமலை மீது மறைமுகமாக கவுதமி புகார்களை வைத்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலக்கியதற்கு அழகப்பன் என்ற பாஜக நிர்வாகி மீது கவுதமி புகார் வைத்துள்ளார். அதில், சி.அழகப்பன் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.

அழகப்பன் 20 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தனிமையை கண்டு என்னை அணுகினார், ஏனெனில் நான் என் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு அனாதை மட்டுமல்ல, ஒரு கைக்குழந்தையுடன் கணவர் இன்றி ஒரு தாயாகவும் இருந்தேன். அக்கறையுள்ள ஆண் என்ற போர்வையில் அவர் என்னையும் எனது குடும்பத்தையும் ஆதரிப்பது போல வந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சூழ்நிலையில்தான் எனது பல நிலங்களின் விற்பனை மற்றும் ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன், சமீபத்தில்தான் அவர் என்னிடம் மோசடி செய்ததைக் கண்டுபிடித்தேன். என்னையும் என் மகளையும் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக வரவேற்பது போல் பாசாங்கு செய்து அவர் நன்றாக ஏமாற்றிவிட்டார். .
நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக, கடுமையாக போராடி வருகிறேன் , என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை மீது புகாரா? : இதொரு நிற்காமல் பாஜக நிர்வாகிகள் மீதும்.. தலைமை மீதும் புகார் வைத்துள்ளார். அதில், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய பாடுபென்டன். பாஜக சார்பாக தொகுதியில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்தேன். எனினும், கடைசி நிமிடத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், கட்சி மீதான எனது உறுதிப்பாட்டைக் காப்பாற்றினேன். இருப்பினும் 25 வருடங்கள் கட்சிக்கு உறுதியான விசுவாசம் இருந்தும், எனக்கு அழகப்பன் விவகாரத்தில் முழு ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் அழகப்பனுக்கு உதவி செய்து வருவதையும் உணரும்போது உடைந்து போய் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன், என்று கூறியுள்ளார்.
தேர்தல் வாய்ப்பு: முக்கியமாக தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி புலம்பி உள்ளார். வானதிக்கு இது பெரிய பிரஷராக மாறியுள்ளது. இப்போது இந்த விவகாரத்தில் வானதி வருத்தம் தெரிவித்துள்ளார். கவுதமியை எதிர்க்காமல்.. மறைமுகமாக அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி கடிதம் அளித்தது வருத்தம் அளிக்கிறது. தன்னம்பிக்கை தைரியம் கொண்ட கவுதமி கட்சியின் அடிப்படை தொண்டராக இருந்தார். அவர் சென்றது வருத்தம் தருகிறது என்று வானதி சீனிவாசன் காட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருந்து காயத்திரி ரகுராம் தொடங்கி பல சினிமா நிர்வாகிகள் .. குறிப்பிட்ட ஜாதியினர் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றியவன் ஒருவனுக்கு கட்சியில் பலர் தீவிரமாக உதவுகிறார்கள், அந்த ஏமாற்று காரனுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்., என்று கூறிவிட்டு கவுதமி விலகி உள்ளார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications