‛‛பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்’’.. நடிகை கவுதமியிடம் ரூ.9.9 கோடி மோசடி வழக்கில் அதிரடி
சென்னை: நடிகை கவுதமியிடம் நிலம் மற்றும் பணமோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகரும், கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அழகப்பன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கவுதமி. இவர் நீண்டகாலமாக பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென்று கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த கவுதமி அதிமுகவில் இணைந்தார். முன்னதாக பாஜகவில் இருந்து விலகியபோது அதற்கான காரணத்தை நீண்ட விளக்கமாக கவுதமி தெரிவித்து இருந்தார்.
அதில் தனது சொத்துகளை சிலர் மோசடி செய்து விற்பனை செய்துவிட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.குறிப்பாக பாஜகவை சேர்ந்த நிர்வாகி மீது அவர் குற்றம்சாட்டியதோடு, இந்த விவகாரத்தில் பாஜக கட்சி தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.
அதாவது கவுதமிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, பவர் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக சேர்ந்த கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விற்றுவிட்டதாக கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் அபகரித்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீடு மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்றுத் தர உதவுவதாக கூறி பவர் பத்திரத்தை அவர் வாங்கி உள்ளார்.
மேலும் பல பத்திரங்களில் கவுதமியிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது குடும்பத்தினரும் கவுதமியின் நிலத்தை அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அழகப்பன் ரூ9.9 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அழகப்பன் கைது செய்யப்பட்டார். கேரளாவில் பதுங்கியவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் நடிகை கவுதமியின் சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பலராமனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அழகப்பன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்த உத்தரவின்பேரில் அழகப்பன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications