அன்று "ஜோக்கர்" இன்று "குற்ற உணர்வு" சீண்டிய காயத்ரி ரகுராம்.. திரண்டு வந்து பதிலடி தந்த சிறுத்தைகள்
சென்னை: "குற்ற உணர்வு" என்று ஒத்த வார்த்தை சொல்லி விசிகவினரை திரும்பவும் அசிங்கப்படுத்தி உள்ளார் காயத்ரி ரகுராம்.. அதனால் விசிகவினர் காயத்ரி ரகுராமை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
சும்மா இருப்பவர்களை சீண்டி பார்ப்பார்களே.. அதுதான் காயத்ரி ரகுராம் செய்து வருகிறார்... தன்னை பிரபலப்படுத்தி கொள்ள, பிரபலமானவர்களுடன் மோதும் போக்கை கடைப்பிடிப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்.

இவர் பாஜகவின் அபிமானி... ஆனால் அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் அவர் இல்லை என்று ஒருமுறை தமிழிசை சவுந்தராஜனே தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக இவர் காட்டி கொள்வதற்காகவே சில ட்வீட்களை போட்டு வருகிறார்.. அந்த வகையில் பெரும்பாலான ட்வீட்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சார்ந்துதான் இருக்கும்.
"சரக்கு மிடுக்கு" என்று எச்.ராஜா எப்போதாவது விமர்சிப்பார்.. ஆனால் காயத்ரி ரகுராம் எப்பவுமே விசிகவினரை சீண்டி வருகிறார்.. இந்துக் கடவுள்களை அவதூறாக பேசிய திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று சொன்னபோது விசிகவினர் கடுமையாக கொந்தளித்தனர்.. அவரது ட்விட்டர் கணக்கு முடக்கும் அளவுக்கு தாறுமாறாக விமர்சித்திருந்தார் காயத்ரி ரகுராம்.
இதேபோல, சிஏஏ விவகாரத்தில் அமித்ஷா, மோடி இருவரும் பதவி விலக வேண்டும் என்று திருமாவளவன் அறிக்கை ஒன்றினை வெளியிட, அந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய காயத்ரி ஒரே ஒரு வார்த்தையில் "ஜோக்கர்" என்று குறிப்பிடவும், திரும்பவும் விசிகவினர் கொந்தளித்தனர்.
இப்போது மீண்டும் விசிகவை சீண்டியுள்ளார்... சமீபத்தில் திரௌபதி படம் வெளியானது.. திரௌபதி சாதி படம் என்று சொன்னாலும் சாதியை தாண்டிய சமூகத்திற்கான படமாகவே உள்ளதாக பலரும் சொல்லி வருகிறார்கள்.. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களும் டாக்டர்.ராமதாஸ் முதல் எச்.ராஜா வரை தெரிவித்தனர்.
ஆனால் விசிகவினர் இந்த படத்தை தடை செய்யக்கோரி சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அருகே மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை காயத்ரி "குற்ற உணர்வு" (GUILTY) என்று தன்னுடைய வழக்கமான ஒற்றை வார்த்தையால் விமர்சித்துள்ளார்.. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.. "ஒஹோ...அப்ப பாஜக பல படங்களை எதிர்த்து போராட்டம் செஞ்சதுக்கு காரணம் அதே Guilty தான் போல." என்றும், ஏன் சும்மா சும்மா விசிகவையே சீண்டிட்டிருக்காங்க என்றும் பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன!
-
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications