சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கிற்கு பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள்- கஸ்தூரி

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு முடிந்த பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அம்மாவை புகழ்ந்து தள்ளும் கஸ்தூரி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார்

    நாடு முழுவதும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என தங்கள் தாய்க்கும் தாயை போன்ற மற்றவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    Actress Kasthuri expresses her Mothers day wishes

    இது போல் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சூப்பர் ஹீரோ இருக்காங்க. அதுதான் அம்மா. சாகசங்கள், தியாகங்களை செய்வது சவால்களை சந்திப்பது, இதெல்லாம் தாய்மார்களுக்கு அன்றாட பணியாகும்.

    அதுவும் ஊரடங்கு சமயத்தில் எல்லாரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். தாய்மார்களுடைய சவால்களும் பொறுப்புகளும் ரொம்பவே அதிகமாகிவிட்டது. ஆனால் அம்மா செய்யும் எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து பார்க்கும் வாய்ப்பு குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் அம்மாக்களுக்கு சந்தோஷம் அதிகமாகிவிட்டது. பாராட்டுகள் அதிகமாகிவிட்டது. அவர்களின் முகங்களில் புன்னகையும் அதிகமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்தவுடன் தாய்மார்களுடைய புன்னகை அவர்களின் முகத்திலேயே தொடரலாமே!

    காவிரி பிரச்சனைக்கு அப்பீல் செய்யாமல் டாஸ்மாக் கடைக்கு மேல்முறையீடு செய்வதா? தினகரன்காவிரி பிரச்சனைக்கு அப்பீல் செய்யாமல் டாஸ்மாக் கடைக்கு மேல்முறையீடு செய்வதா? தினகரன்

    அதுக்கு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கிற்கு கொடுக்காமல் தாய்மார்களுக்கு கொடுத்தால் உங்கள் வீடும் நல்லாயிருக்கும், தாய்தமிழ் நாடும் நல்லாயிருக்கும். எல்லோருக்கும் என் இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Kasthuri expresses her Mother's day wishes and advised not to go to Tasmac and give the money for liquors instead she advised to give money to mothers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X