"படுத்தே விட்டானய்யா மொமன்ட்".. நடிகை கஸ்தூரி "அதை" சொன்னதுமே.. கிளம்பி வந்த திமுக.. கடுப்பில் மநீம
சென்னை: திமுக அரசை ஆதரித்து, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இது தற்போது இணையத்தில் விவாதத்தை உண்டுபண்ணி வருகிறது.. இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் கமலை விமர்சித்திருப்பது கூடுதல் பரபரப்பை தந்து வருகிறது.
சென்னையை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்துவிட்டது இந்த புயல்.. 5 நாட்களாகியும் சென்னை இன்னும் மீளவில்லை.. பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
கமல் விமர்சனம்: இந்நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் 2 நாட்களுக்கு முன்பு ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "அரசு எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும், இயற்கை சீற்றங்களின் விளைவுகளை, ஓர் எல்லை வரைதான் தான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நம் பாதுகாப்பை உறுதி செய்து, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு, நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்" என்று கூறியிருந்தார்.
கமலின் இந்த கருத்து, பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.. காரணம், கடந்த, 2020 அக்டோபரிலும் இப்படித்தான் மழை வெளுத்து கட்டியது.. அந்த நேரத்தில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.. கனமழை என்பதால், சில இடங்களில் பாதிப்புகளும் ஏற்பட்டன.. அப்போது, கமல் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. கருணை மழையை சேகரிக்க, நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை " என்று சாடியிருந்தார்.
கருத்து: அதுமட்டுமல்ல, "கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை, கரையோர மாவட்டங்களின் மேல், கடைக்கண்ணாவது வையுங்கள்" என்று இடித்துரைத்திருந்தார்.. ஆனால், இந்த முறை திமுக ஆட்சி நடக்கிறது.. ஆனால், கமல் இடித்துரைக்கவேயில்லையே? விமர்சித்தும் கருத்து சொல்லவில்லையே ஏன்? என்று சோஷியல் மீடியாவில் சிலர் கேள்விகளை எழுப்பினார்கள்..
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், திமுகவுடன் மநீம கூட்டணி வைக்கப்போவதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன.. கமலுக்கு 1 சீட் வழங்கவும் திமுக தரப்பில் நினைப்பதாகவும், ஆனால், தங்களுக்கு கோவை உட்பட 2 சீட் வேண்டும் என்று கமல் தரப்பில் கறாராக இருப்பதாகவும் தகவல்கள் வட்டமடித்து வருகின்றன.
கூட்டணியில் கமல்: எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணியுடன் இணைய போவதால்தான், வெள்ளம் குறித்து ஆளும் கட்சிக்கு சாதகமாக, கமல் இப்படி கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும் சலசலக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நிவாரணப் பணிகள் நேற்று வழங்கப்பட்டன.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "இதற்கு முன்பு வந்தெல்லாம் சிற்றிடர், ஆனால் இது பேரிடர்.. அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அரசை குறை சொல்ல இது நேரமல்ல" என்றார்.. கமலின் இந்த பேச்சும், மறுபடியும் சோஷியல் மீடியாவில் விவாதமாகியுள்ளது.
கமல் பேச்சு: "வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து, உடைமைகளை இழந்துள்ளோம்.. 5 நாளாகியும் வெள்ள நீர் வடியவில்லை.. கரண்ட் இல்லை. இன்னும் பல இடங்களில் செல்போன் சிக்னலும் வரவில்லை.. தாம்பரம், வேளச்சேரி பகுதியில் படகு போக்குவரத்து நடக்கிறது.. இவ்வளவு அவதியில் உள்ளபோது, நாங்கள் எங்கள் பிரச்சனையை கூட பேசக்கூடாதா?" என பாதிக்கப்பட்டவர்கள் கமலை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், சமூக ஆர்வலரும், பிரபல நடிகையுமான கஸ்தூரி, கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.. கமல்ஹாசன் பேசியதை தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்து, "தட் படுத்தேவிட்டானய்யா மொமென்ட்.. மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது" என்று பதிவிட்டுள்ளார்.
ஆதரவு: கஸ்தூரியின் இந்த பதிவுக்கு ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.. அதேபோல, திமுக உள்ளிட்ட கட்சியினரும், வழக்கம்போல் கஸ்தூரிக்கு பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்..
மிக்ஜாம் புயலுக்கு முன்பு, அதாவது கடந்த வாரம் சென்னையில் பெய்த மழையால், கஸ்தூரியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் நிறையவே மழைநீர் சூழ்ந்திருந்தது.. கஸ்தூரியின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ளது.. இவரது வீட்டின் முன்பு மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றதை இதை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார்.
கப்பு தண்ணி: அதில், "ஆட்சிக்கு வந்ததும் மழைவடிகால்ன்னு எட்டு மாசம் தோண்டி போட்டுருந்தாங்க. தள்ளிக்கிட்டே போச்சு ,மழை வந்துருச்சு. ரோட்டையும் மூடல்லே, வேலையும் முடியல்லே... இப்போ தெரு சாக்கடை ஓவர்ஃப்ளோ ஆகி எங்க வீட்டை சுத்தி கப்பு தண்ணி" என்று பதிவிட்டிருந்தார்..
கஸ்தூரியின் "கப்பு தண்ணி" வீடியோ திமுக தரப்புக்கு எரிச்சலை தந்த நிலையில், கமலை கிண்டலடித்து தற்போது பதிவிட்டிருக்கும் ட்வீட்டும், மக்கள் மய்யத்தினரிடம் டென்ஷனை உண்டுபண்ணி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications