நடிகை கஸ்தூரி டெல்லியில் தஞ்சம்? யார் வீட்டில் தங்கியுள்ளார்? விரைந்த தமிழக தனிப்படை! இன்று கைது?
சென்னை: நடிகை கஸ்தூரி டெல்லியில் ஒரு தேசிய கட்சியின் பிரமுகரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாக கிடைத்த தகவலை வைத்து தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
நடிகை கஸ்தூரி எந்த கட்சி பிரமுகரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை இந்த தகவல் உண்மையாக இருந்தால் நிச்சயம் கஸ்தூரி, இன்றோ அல்லது ஓரிரு நாட்களிலோ கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

மேலும் கஸ்தூரி ஆந்திராவில் , ஒரு சினிமா தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஒரு தனிப்படை போலீஸார் அங்கும் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிராமண சமூகத்தினரை வந்தேறிகள் என பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை கண்டித்து கடந்த வாரம் சென்னை எழும்பூரில் பிராமணர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்.
அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெலுங்கு பேசும் பிரிவை சேர்ந்த பல்வேறு கட்சி பிரதிநிதிகளும் கஸ்தூரிக்கு கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் தனது கருத்தை வாபஸ் பெறுமாறும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் கோரிக்கை எழுந்தது.
ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு சமூகவலைதளங்களில் விளக்கம் அளித்த கஸ்தூரி, தான் தெலுங்கு பேசும் மக்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் ஒரு போதும் அவர்களை தவறாக பேசவில்லை என்றும் தான் தெலுங்கு பேசும் குடும்பத்தின் மருமகளான நிலையில் எப்படி தவறாக பேசுவேன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
கஸ்தூரி பேசிய வீடியோவை போட்டு காண்பித்து நீங்கள் இப்படித்தானே பேசினீர்கள் என கேட்ட போதும், அந்த வீடியோவை கூட பார்க்காமல் நான் அப்படி பேசவே இல்லை என சாதித்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கஸ்தூரி மீது புகார் எழுந்தது. இதனால் தனது போயஸ் தோட்ட இல்லத்தை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டு எங்கே தலைமறைவாகிவிட்டார்.
இது அன்றைய தினம் போலீஸார் அவருக்கு சம்மன் கொடுக்கச் சென்ற போது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஸ்தூரியை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களிலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவானது கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். சமூக ஆர்வலர் என கூறும் கஸ்தூரி இப்படி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு மீது நவ.14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு ரத்தானது. இதைத் தொடர்ந்து கஸ்தூரியை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரது இருப்பிடத்தை செல்போன் சிக்னலை வைத்தும் கண்டறிய முடியவில்லை.
கஸ்தூரி வேறு செல்போனில் இருந்து யாருடனாவது பேசி வருகிறாரா என தெரியிவல்லை. இதனால் கஸ்தூரிக்கு நெருக்கமானவர்களின் செல்போனுக்கு வரும் எண்களை போலீஸார் கண்காணித்து வருவதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கஸ்தூரி டெல்லியில் ஒரு அரசியல் பிரமுகர் வீட்டில் அதிலும் தேசிய கட்சியின் பிரமுகர் வீட்டில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே ஆந்திராவில் கஸ்தூரி இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதிலும் ஒரு சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாம். இதனால் அங்கும் ஒரு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கஸ்தூரிக்கு ஹைதராபாத்தில் ஒரு வீடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் அவர் ஆந்திரா அரசியலில் குதிக்க போவதாக அவரே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதால் அவருக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தஞ்சம் கொடுத்திருப்பார்களா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. எதுவாக இருந்தாலும் கஸ்தூரி கைது செய்யப்படும் போதுதான் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது தெரியவரும்.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications