எப்பவுமே இரட்டை இலைக்கு தான் ஓட்டுப் போடுவேன்! என் குடும்பமே அதிமுக! நடிகை கஸ்தூரி வைத்த ட்விஸ்ட்!
சென்னை: தனக்கு ஓட்டுரிமை கிடைத்தது முதல் இதுவரை இரட்டை இலை சின்னத்துக்கு மட்டுமே தாம் வாக்களித்து வருவதாக கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் விஜயகாந்துக்காக ஒரே ஒருமுறை மட்டும் முரசு சின்னத்தில் தாம் வாக்களித்திருப்பதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

நடிகை கஸ்தூரியை பொறுத்தவரை சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடியவர். நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும் எப்போதும் சமூக வலைதளப்பக்கங்கள் வாயிலாக அரசியல் பேசுபவர்.
நடிகை கஸ்தூரிக்கு பாஜக, மநீம, உள்ளிட்ட கட்சிகளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அழைப்புகள் வந்த போதும் அரசியல் கட்சிகளில் இணையாமல் அரசியல் பேசி வந்தார்.
இதுவரை நான் இந்தக் கட்சி தான் என்பதை வெளிப்படையாக கூறாத கஸ்தூரி, தனக்கு ஓட்டுரிமை கிடைத்தது முதல் இதுவரை இரட்டை இலை சின்னத்துக்கு மட்டுமே தாம் வாக்களித்து வருவதாக பேசி ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

தாம் மட்டுமல்ல தனது குடும்பத்தினரும் இரட்டை இலை சின்னத்துக்கு தான் வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் நடிகை கஸ்தூரி பக்கா அதிமுககாரர் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தாம் ஒரு பாரம்பரிய அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை, நடிகை கஸ்தூரி இப்போது தான் முதல் முறையாக பொதுவெளியில் மைக் பிடித்து பேசி தெரியப்படுத்தியுள்ளார்.
தென் சென்னை அதிமுக சார்பில் தி.நகர் சத்யா ஏற்பாட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, படப்பிடிப்பில் இருந்த தாம் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்ததையும் குறிப்பிட்டார்.
இதனிடையே தமிழக அரசு 12 மணி நேரம் வேலைத் திருத்த மசோதாவை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், அதிமுக கூட்டத்தில் அதுக் குறித்து பேசி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications