நீச்சல் உடையில் குளியல் வீடியோ போட்ட கஸ்தூரி.. குவிந்த ஆபாச கமென்ட்.. நடிகையின் செம பதில்!
சென்னை: நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளித்தது போன்ற ஒரு வீடியோவை எடுத்து நடிகை கஸ்தூரி பதிவிட்டதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் டாக்டர் ரவிக்குமார் என்பவரை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நடிகை கஸ்தூரி ஒரு வழக்கறிஞரும் கூட!, இவர் சமூக ஆர்வலர், சமூகம் சார்ந்த கருத்துகளை ஆதரித்தும் எதிர்த்தும் வருவார். இவர் 1992 இல் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார்.

டிவி விவாதம்
இவர் பல்வேறு டிவி விவாதங்களிலும் பங்கேற்பார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவர் அரசியல் குறித்தும் தனது கருத்துகளை விவாதங்களிலும் சமூக வலைதளங்களிலும் தெரிவித்து வருவார்.

போட்டோ ஷூட்
மேலும் இவர் போட்டோஷூட் எடுத்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். மேலும் சுற்றுலா சென்ற போது எடுத்த வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் அண்மையில் நீச்சல் உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரி குளியல் வீடியோ
கஸ்தூரியின் குளியல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஏராளமான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமான கமென்ட்டுகளும் அதிகம் பதிவிடப்பட்டு வந்தன. அவ்வாறு விமர்சித்தவர்களை கஸ்தூரி விடாமல் வெளுத்து வாங்குவார் என பலர் நினைத்திருந்தனர்.

பதிலடி
ஆனால் அவரோ தனது பதிலடியில் ஆபாச பேச்சுகள் வேண்டாம். நற்பண்பு கொண்டவராக நடந்து கொள்ளுங்கள் என கஸ்தூரி அந்த ஆபாச கமென்ட்களுக்கு கூலாக நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி.ராஜாமணியும் இயக்கியுள்ளனர்.

கஸ்தூரி
கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் எனும் இந்தி குறும்படத்திலும் 2010இல் தமிழ் படத்தின் வாயிலாகவும் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கருத்து சொல்ல தவிர்த்த ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்த கஸ்தூரி, அவரது ரசிகர்களிடம் கடுமையான பதிலடிகளை பெற்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications