நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியவர் போலீசில் சிக்கியது எப்படி?
சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அங்கு அவர் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
அதாவது, "300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?'' என்று பேசியிருந்தார்.
கஸ்தூரியின் இந்த கருத்து தான் சர்ச்சையானது. அவர் தெலுங்கு பேசும் மக்களை இழிவுப்படுத்திவிட்டதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல இடங்களில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கஸ்தூரிக்கு சம்மன் வழங்க சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை எழும்பூர் போலீசார் சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே தான் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் கஸ்தூரிக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் கஸ்தூரி விரைவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் இன்று கஸ்தூரியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் கஸ்தூரி, சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததாகவும், அதனை மோப்பம்பிடித்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை கஸ்தூரிக்கு தெலுங்கு சினிமா துறைக்கும் தொடர்பு உள்ளது. இதனால் நடிகை கஸ்தூரி ஆந்திரா அல்லது தெலுங்கானாவில் தான் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனால் ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கஸ்தூரி பதுங்கிய இடத்தை அடையாளம் கண்டு அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் கைதான கஸ்தூரியை எழும்பூர் தனிப்படை போலீசார் சாலை மார்க்கமாக காரில் சென்னை அழைத்து வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அழைத்து வரும் போலீசார் அவரை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications