எஸ்ஆர் எம்மில் என்னதான் நடக்குது.. உண்மையை சொல்லுங்களேன்.. கஸ்தூரி ஆதங்கம்
எஸ்ஆர்எம் கல்லூரி தற்கொலைகளின் உண்மை தன்மை என்ன? என்று கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "எஸ்ஆர்எம் கல்லூரியில் 2 பேர் தற்கொலை செய்தது குறித்து யாராவது உண்மையைச் சொல்லுங்களேன்" என்று நடிகை கஸ்தூரி கேட்டுள்ளார்.
இந்த இரு தற்கொலை சம்பவங்களும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் பெரிதாக பேசப்படாமல் போய் விட்டன. குறிப்பாக ஊடகங்களில் இது அதிகம் அடிபடவில்லை.
முதல் நாள் ஒரு மாணவி தற்கொலை செய்கிறார். அடுத்த நாள் மாணவன் தற்கொலை செய்கிறான் இருவருமே வேறு மாநிலத்தவர். இதுதான் சர்ச்சைக்கு முக்கியக் காரணம்.

திமுக சின்னம்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் இப்போது பெரிதாக வெடித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆகியிருப்பதால். இதனாலும் கூட இது பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
|
என்ன நடக்குது?
இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் என்ன இருக்கிறது என்றால், "எஸ்ஆர்எம் கல்லூரி தற்கொலைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. என்ன நடந்தது என்பது நாட்டுக்குத் தெரிய வேண்டும். யாராவது உண்மையை விளக்குவார்களா" என்று கேட்டுள்ளார் கஸ்தூரி.
|
தனிப்பட்ட காரணம்
இதற்கு அந்தக் கல்லூரியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "அக்கா நான் அங்குதான் வேலை பார்க்கிறேன். தனிப்பட்ட காரணத்தால்தான் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை . சமூக வலைதளங்கள்தான் தேவையில்லாமல் பிரச்சினை ஆக்குகின்றன" என்று கூறியுள்ளார்.
— Lantasco🇮🇳🏳️🌈 (@Lantasco1999) June 1, 2019 |
யுவராஜ்
ஆனால் இதற்கு ஒருவர் அளித்துள்ள பதில் டிவீட்டில், யுவராஜ் என்பவர் அந்தக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். மேலும் திமுக தலைவர் மு.கஸ்டாலின் டிவீட்டை அவர் ரீட்வீட் செய்துள்ளார். அவரது பதிலில் எப்படி நியாயத்தை எதிர்பார்க்கலாம் என்று கேட்டுள்ளார்.

பரபரப்புகள்
மொத்தத்தில் இந்த தற்கொலை விவகாரத்தில் உண்மை என்னவென்று தெரியவில்லை. மாறாக பரபரப்புகள்தான் கச்சை கட்டி பறக்கின்றன. கஸ்தூரி கேட்கும் கேள்வியைத்தான் நாமும் கேட்கணும் போல இருக்கு.. உண்மையை யாராச்சும் சொல்லுங்கப்பா!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications