"எண்ணையை தடவிக்கிட்டு மணல்ல புரண்டாலும்".. வைகோ குறித்து கஸ்தூரி பரபரப்பு டிவீட்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Actress Kasturi criticized DMK : வைகோ குறித்து கஸ்தூரி பரபரப்பு டிவீட்- வீடியோ

    சென்னை: "டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம்! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே!" என்று வைகோவுக்கு வழங்கிய தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து சொல்லி உள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விட்டு வந்தார் கஸ்தூரி. எதற்கான இந்த சந்திப்பு என்று கேட்டதற்கு மரியாதை நிமித்தம் என்று பதில் தந்தார்.

    Actress Kasturi tweet about Vaiko

    ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுகிறாரோ இல்லையோ, திமுகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நடந்து முடிந்த தேர்தலின்போது, இயக்குனர் கரு பழனியப்பன் திமுகவுக்காக பிரச்சாரம் செய்த சமயம் ""கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்-னு நினைச்சேன்.. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல்!" என்று தாக்கி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

    இப்போது, வைகோ விவகாரத்திலும் ட்வீட் போட்டு திமுகவை தாக்கி உள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும் சென்னை சிறப்பு நீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பளித்துள்ளது.

    இதுகுறித்து கஸ்தூரி, "2009 இல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார் ? அன்றைய திமுக அரசு . இதை தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    அதேபோல, "எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே !" என்றும் இன்னொரு ட்வீட் போட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+