நடிகை கஸ்தூரியின் செல்போனை யாரோ "ஹேக்" பண்ணிட்டாங்களாமே? யார் பார்த்த வேலையிது? உடனே வந்த இணையதளம்
சென்னை: கஸ்தூரியின் செல்போன் ஹேக் செய்துவிட்டார்களாம்.. இதுசம்பந்தமாக கஸ்தூரியின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் திரண்டு வந்து, அந்த பதிவுக்கு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.
பிரபல நடிகை கஸ்தூரி, இயல்பாகவே துணிச்சல் நிறைந்தவர்.. திமுக, அதிமுக, விசிக கட்சிகளை கடுமையாக விமர்சிப்பவர்.. டாஸ்மாக் முதல் சட்டம் ஒழுங்கு சீர்கேடுவரை திமுக அரசின் பல்வேறு விவகாரம் கேள்விகளை எழுப்பி கொண்டிருப்பவர்.. அதேசமயம் பாஜக ஆதரவாளராகவும் கருதப்படுபவர்.

கடந்த நவம்பர் மாதம் தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிறகு அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
காரசார பேட்டிகள்: அவ்வப்போது அவர் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அத்துடன், முக்கிய பிரச்சனைகள் குறித்து காரசார பேட்டிகளையும் தந்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்புகூட, "பேட் கேர்ள்" படம் பற்றின தன்னுடைய கண்டனங்களை கடுமையாக பதிவு செய்திருந்தார்.
ஒரு சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில் "ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண், அவுசாரியாக போவதுதான் கதை என்றால், சிறந்த பக்திமிக்க குடும்பங்கள், சிறந்த ஒழுக்கமிக்க குடும்பங்கள், பிராமண சமூகத்தை தவிர வேறு எங்குமே இல்லை என்று "பேட்கேர்ள்" படத்தின் பெண் டைரக்டர் நினைக்கிறாரா? அல்லது வெற்றிமாறன் நினைக்கிறாரா? ஒழுக்கமான குடும்பம் என்றால், பிராமண குடும்பத்தைதான் எப்பவும் காட்டுவீங்களா? அப்படியென்றால், அது தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்குமான ஒரு இழிவுதான்" என்று கொந்தளித்து கூறியிருந்தார் கஸ்தூரி.
இந்நிலையில், கஸ்தூரியின் செல்போனை யாரோ ஹேக் செய்துவிட்டார்களாம்.. இதை கஸ்தூரியே தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில், "என்னுடைய மொபைல் போன் "ஹேக்" செய்யப்பட்டு விட்டது. இதனை வேறு மொபைல்போனில் இருந்து பதிவிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கிண்டல், கேலி: இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை கிண்டல் செய்யும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அக்கறையுடன் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
"உங்க அக்கவுன்ட்டை ஹேக் பண்ணி அவன் என்ன பண்ண போறான்? சும்மா கதை விடாதீங்கோ? என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "உங்க போனை ஹேக் பண்றதுக்கு பதிலா, உங்களையே hijack பண்ணி இருந்தா😂😂 நாங்க வருத்தப்படுறதில ஒரு நியாயம் இருக்கும், போன் தானே அம்மணி? வேற வாங்கிடலாம். Data வைச்சு அவன் என்ன பண்ணிட போறான்.. நம்பிக்கையோடு இருங்க.. அது வேற எதாவது சாப்ட்வேர் issue வாக இருக்கும்" என்று ஆறுதல் சொல்லி உள்ளார்.
ஐடியா: மேலும் சிலரோ, உடனே போலீஸில் புகார் தந்தீங்களா? உடனே புகார் அனுப்புங்க. விரைவில் சரியாயிடும் என்று கஸ்தூரிக்கு ஐடியா தந்து வருகிறார்கள். ஆகமொத்தம் கஸ்தூரியின் பதிவு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications