எலெக்ட்ரிக் கார் தீப்பிடித்ததாக கீர்த்தி பாண்டியன் ட்வீட்.. என்ன நடந்தது? எம்ஜி நிறுவனம் விளக்கம்
சென்னை: எம்ஜி எலக்ட்ரிக்கல் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் தெரிவித்து இருந்த நிலையில் அதுகுறித்து கார் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்து உள்ளது.
இந்தியாவில் முன்பு டீசல்களும், அதன்பின்னர் தற்போது பெட்ரோல் கார்களும் கொடி கட்டி பறக்கின்றன. இந்நிலையில் மக்கள், பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக இப்போது எலக்ட்ரிக் கார்களை அதிக அளவு பயன்படுத்த விரும்புகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் தேவையும் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை பல மாடல்களில் தயாரித்து விற்க தொடங்கி உள்ளன.

டாடா, சிட்ரோன், எம்ஜி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதில் விற்பனையில் முன்னணியில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்று சென்னையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவரின் mg zs ev கார் ஆறு வாரங்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுபற்றி சரவணன் வெளியிட்டுள்ள பதிவில், 26.61லட்சம் ரூபாய் கொடுத்து நான் வாங்கிய mg zs ev கார், கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பு பார்க்கிங்கில் இருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த என் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 30 நிமிடத்தில் வந்து தீயை அணைத்தனர். இந்த பிரச்சனை குறித்து நான் தகவல் தெரிவித்தும் எம்ஜி நிறுவனம் கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு மிகுந்த மனஉளைச்சலாக உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
This is my neighbour @Saravanakumar15 car. He has little children and elders at home, What if they were around when this happened!?? This is so freaking dangerous. You need to be responsible in at least dealing with a disaster like this and responding!!! @rajeev_chaba… https://t.co/wfIeLBEJdL
— Keerthi Pandian (@iKeerthiPandian) December 25, 2023
இதுகுறித்து கார் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்து உள்ளது. அதில், "கார் தீப்பிடித்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டதில் புற காரணங்களாலேயே இந்த சம்பவம் நடந்து உள்ளது உறுதியாகிறது. வாடிக்கையாளரும் அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்பாக உள்ளார்கள். எங்கள் தொழில்நுட்ப குழு களத்தில் இருந்து வாடிக்கையாளரிடம் பேசி முடிந்த உதவிகளை செய்து வருகிறது. எம்ஜி நிறுவனம் பாதுகாப்புக்கும், தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தரத்தில் எவ்வித சமரசமும் இன்றி கார்களை உற்பத்தி செய்து வருகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications