ஏஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவோரின் மனநிலை கீழ்த்தரமானது... நடிகை குஷ்பூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஐ மூலம் பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் முதலில் தங்கள் வீட்டுப் பெண்களை வைத்துச் செய்து பாருங்கள் என்று நடிகை குஷ்பூ காட்டமாக விமர்சித்துள்ளார். அனைத்து துறைகளிலும் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு தொலைக்காட்சிகள் வழங்கும் தயாரிப்புத் தொகை மட்டும் உயரவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவியும் நடிகையுமான குஷ்பூ, கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள், சங்கத்துக்குத் தனி இடம் ஒதுக்குவது, நிதி திரட்டும் நிகழ்ச்சி மற்றும் AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

Actress Khushbu Sundar said that The mindset of those who misuse AI technology is despicable

குஷ்பு பேசுகையில், "தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் ஒட்டுமொத்தத் தொலைக்காட்சித் துறையும் சிறப்பாக இருக்கும். திரைக்கு முன்னால் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே அனைவருக்கும் தெரியும், ஆனால் திரைக்குப் பின்னால் இருந்து தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவே இந்தப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

மேலும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின்போது எங்களுக்குப் பக்கபலமாக இருந்த ஆர்.கே.செல்வமணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

அனைத்து துறைகளிலும் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு தொலைக்காட்சிகள் வழங்கும் தயாரிப்புத் தொகை மட்டும் உயரவில்லை என்பது வேதனையளிக்கிறது. தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர்களுக்கு தொலைக்காட்சிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தொகையையே தற்போது வரை வழங்கி வருகின்றன. தயாரிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு எங்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் நிதி உதவி தேவைப்படுகிறது.

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தனியாக ஓர் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு உரிய வழிவகை செய்து தருவதாக முதலமைச்சரும் உறுதியளித்துள்ளார். சங்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கில் மலேசியாவில் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளோம், அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகர் சிலம்பரசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஓடிடி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒரு நடிகர் அல்லது நடிகையைத் தங்களது தொடரில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று சாதனை படைத்த நடிகர் சிவகார்த்திகேயன் போன்றவர்களின் வளர்ச்சி எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. அவ்வாறு சென்ற நடிகர்கள் எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப வளர்ச்சியில் நல்லதும் தவறானதுமான இரு பக்கங்கள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். பெண்களின் புகைப்படங்களை அனுமதியின்றி ஆபாசமாகச் சித்தரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்களது செயல்களின் பாதிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களைத் தங்களது குடும்பப் பெண்களை வைத்து முதலில் செய்து பார்க்கத் தயாரா?" எனக் கேள்வி எழுப்பி, AI தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவோரின் செயல்களுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு முடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+