கவனிச்சீங்களா! அமித்ஷா மகன் ஜெய்ஷா சொன்ன ஒற்றை வார்த்தை! பிசிசிஐ-யை பாராட்டிய நடிகை குஷ்பு! ஏன்?
சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளார். இந்நிலையில் தான் ஜெய்ஷா சொன்ன ஒற்றை வார்த்தைக்காக பிசிசிஐ-யை நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு பாராட்டி வரவேற்றுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய்ஷா. இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் செயலாளராக உள்ளார். அதேபோல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

முன்னதாக பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இருந்தார். அப்போதும் ஜெய்ஷா செயலாளராக செயல்பட்டார். ஆனால் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அவர் மீண்டும் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஜெய்ஷா தொடர்ந்து செயலாளராக இருக்கிறார்.
இதனால் ஜெய்ஷா அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவரது தந்தை அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருப்பதாலே ஜெய்ஷா இந்த பொறுப்பில் தொடர்வதாக அவ்வப்போது இணையதளங்களில் சிலர் விமர்சனம் செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் தான் ஜெய்ஷா சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, ‛‛ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு ஒரே மாதிரியாக பரிசுத்தொகை வழங்கப்படும். இது ஒரு புதிய விடியலின் துவக்கம். மேலும் இது பாலின சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய நகர்வு. இந்த முயற்சியை அடைய உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி'' என தெரிவித்தார்.
அதாவது கிரிக்கெட்டில் ஆண்கள், பெண்கள் என இரு அணிகள் பங்கேற்று வருகின்றன. ஆனால் ஆண்களுக்கான போட்டியில் பரிசுத்தொகை என்பது அதிகமாகவும், பெண்களுக்கான போட்டியில் பரிசுத்தொகை குறைவாகவும் இருந்து வருகிறது. தற்போது இந்த வேறுபாட்டை நீக்குவதாக ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் ஜெய்ஷாவின் இந்த அறிவிப்புக்காக பிசிசிஐ-யை நடிகை குஷ்பு பாராட்டியுள்ளார். திரைத்துறையில் நடிகையாக ஜொலித்த குஷ்பு அரசியலிலும் நுழைந்தார். தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக குஷ்பு உள்ளார். மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் பிசிசிஐ-வின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகை குஷ்பு இணைந்துள்ளார். இதுதொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இது அருமையான செய்தி. அனைவரும் சமம், சமத்துவம் என்பது தான் வளர்ச்சியின் முக்கிய புள்ளியாக இருக்கும்.
கிரிக்கெட்டில் ஆண்கள் செய்யும் அதே பணியை தான் பெண்களும் செய்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆண்களை விட பெண்கள் கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். இத்தகைய சூழலில் பெண்களுக்கு ஏன் குறைந்த ஊதியம் வழங்க வேண்டும்? தற்போதைய முடிவு சிறப்பானது.'' என தெரிவித்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications