சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மிஸ்டர் பிரதமர்.. பச்சோந்தியைவிட வேகமா நிறம் மாறுகிறீர்களே".. குஷ்பு போட்ட டிவீட்தான்!

பிரதமர் மோடியை குஷ்பு விமர்சித்த ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: "மிஸ்டர் பிரதமர்.. பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்கள்.. வெட்கக்கேடு"என்று அன்று சொன்ன அதே குஷ்புதான் "நாட்டை சரியான பாதையில் பிரதமர் கொண்டு செல்கிறார்.. இந்தியாவை வழி நடத்த பிரதமர் மோடி போன்றோரால்தான் முடியும்" என்று சர்ட்டிபிகேட் தந்துள்ளார்.. குஷ்புவின் இந்த பச்சோந்தித்தனத்தை நினைத்து தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

அதிருப்தி காரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளார் நடிகை குஷ்பு.. கட்சியில் சேர்ந்த கையோடு, பிரதமருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், குஷ்பு விஷயத்தில் அப்படி எளிதாக எடுத்து கொண்டு கடந்து விட முடியாது.. காரணம், கட்சி மாறினால் பரவாயில்லை, சித்தாந்தமே மாறி உள்ளது.. அடித்தளமே அசைந்துவிட்டது.. குஷ்புக்கென்று எந்த ஒரு கட்சி கொள்கையும், நிலைப்பாடும், உறுதிப்பிடிப்பும் இல்லையென்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை... தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் - குஷ்பு காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை... தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் - குஷ்பு

காங்கிரஸ்

காங்கிரஸ்

திமுக, காங்கிரஸ், பாஜக என்று எல்லா கட்சிகளிலும் ரவுண்டு அடித்து வரும் பல கட்சி பிரமுகர்கள் எந்த செல்வாக்கையும் நிரந்தரமாக தக்க வைத்து கொண்டதில்லை.. இதற்கு ராதாரவி முதல் எஸ்வி சேகர் வரை பல உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும்.. ஆனால், குஷ்புவிடம் நமக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி என்னவென்றால், கடந்த மாதம் வரை இதே பாஜகவை சரமாரி விமர்சித்து வந்ததுதான்.. குறிப்பாக கொரோனா சமயத்திலும், பிரதமரை அவர் கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட்களை இன்னும் யாராலும் மறக்க முடியவில்லை.

 சமைக்கணும்

சமைக்கணும்

ஒருமுறை லாக்டவுன் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, குஷ்பு திடீரென ஒரு ட்வீட் போட்டார்.. அதில், "அய்யோ.. பாயிண்டுக்கு வாங்க சாமி... சமைக்கணும்... எதிர்காலத்தில் பொறுத்திருந்து பாருங்கள்... 8 மணி என்னாச்சு? வெறும் காத்துதான் வந்தது... போங்கடா.. என் சமையலாவது நேரத்துல முடிச்சிருப்பேன். நேரம் வீணாப் போச்சு" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தி

இந்தி

பிரதமர் பற்றி இப்படி பேசியது, எச்.ராஜாவுக்கே கொந்தளிப்பை தந்துவிட்டது.. உடனே பதிலுக்கு அவர் ஒரு ட்வீட் போட்டார்.. "முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும்... நான் 4 ஆண்டுகள் தான் ம.பி.யில் இருந்தேன். இந்தியை இந்தியில்தான் எழுதுகிறேன்.. பிரதமர் சுயசார்பு பற்றிப் பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை" என்றார்.

 எச்.ராஜா

எச்.ராஜா

இதை பார்த்த குஷ்பு, எச்.ராஜாவையும் வம்பிழுத்தார்.. ''ஏன் உங்களுக்கு எரியுது? நான் எங்குமே பிரதமர் பெயரை சொன்னேனா.. சில் பண்ணுங்கள்... வெயில் அதிகமாக இருக்கு... தமிழ் எழுத படிக்கத் தெரியும். அதை உங்களிடம் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வணக்கம்" என்றார்.. இப்படி குஷ்புவும், எச்.ராஜாவும் பகிரங்கமாக ட்விட்டரில் மோதிக் கொண்டதை வேடிக்கை பார்த்த தமிழக மக்கள்தான், இன்று பிரதமர் மோடியை குஷ்பு பாராட்டுவதையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 விளக்கு

விளக்கு

கொரோனாவை எதிர்க்க, விளக்கேற்றி வைக்குமாறு பிரதமர் சொன்ன கருத்துக்கும் நக்கலாக கமெண்ட் போட்டார் குஷ்பு.. "யுரேகா!! கொரோனாவை எதிர்க்க என்ன ஒரு அற்புதமான வழி..இப்படி செய்வதால் கோவிட் பிரச்சனை தீர்ந்துவிடுமா...விளக்கு வைக்கிறேன்.. விளக்கு வைக்கிறேன்" என்று பதிவிட்டார்.

 டவுட்டு

டவுட்டு

சில தினங்களில், பிரதமர் மறுபடியும் நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, "ஒரேயொரு டவுட்டு... பிரதமர் நேத்து எந்த மொழியில பேசுனார்?" என்று கேள்வி எழுப்பினார். இப்படித்தான் ராஜீவ் காந்தி நினைவு நாளன்று, பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார்... அதற்கு குஷ்பு, "மிஸ்டர் பிரதமர்.. நீங்கள் ராஜீவை அசிங்கப்படுத்தினீர்கள், கேவலமாக விமர்சித்தீர்கள். இப்போது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்களே! பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்கள் பிரதமரே. வெட்கக்கேடு" என்று பதிவிட்டார்.

 தமிழக மக்கள்

தமிழக மக்கள்

இவ்வளவு காரசாரமான ட்வீட்களை சில தினங்களுக்கு முன்பு வரை குஷ்பு பதிவிட்டதுதான் நம் மக்களுக்கு அதிர்ச்சியே.. பொதுவாக தமிழக மக்கள் எதையும் உன்னிப்பாக கவனித்து வருபவர்கள்.. வடக்கில் இருந்த வந்த பெண் என்று தெரிந்தும், ஆதரித்து, தமிழ் பெண்ணாக ஏற்றுக் கொண்டு அடைக்கலம் தந்தவர்கள்.. இப்போது குஷ்புவின் இந்த நிறம் மாறிய அரசியலையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. எப்படி ஓட்டு கேட்க தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார்? எந்த முகத்துடன் மக்களை குஷ்பு எதிர்கொள்வார் என்பது பெரிய ஆச்சரியம்தான்!

English summary
Actress Kushboo's Anti BJP Tweets
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X