சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமருக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத திமுக அரசு! தமிழகத்துக்கு தான் இது அவமானம்! குஷ்பு சாடல்!

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாதது தமிழகத்துக்கு தான் அவமானம் என நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.

அரசியல் நாகரீகம், பண்பாடு, மரியாதை தெரியாத அரசாக திமுக அரசு இருக்கிறது என குஷ்பு சாடியுள்ளார்.

மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்காவிட்டால் செஸ் ஒலிம்பியாட் எப்படி சென்னையில் நடந்திருக்கும் என, தமிழக அரசை நடிகை குஷ்பு வினவியுள்ளார்.

அடேங்கப்பா.. 53 மெனுவில் 700 டிஷ்.. 3500 வெரைட்டி.. அசர வைக்கும் செஸ் ஒலிம்பியாட் உணவு பட்டியல்! அடேங்கப்பா.. 53 மெனுவில் 700 டிஷ்.. 3500 வெரைட்டி.. அசர வைக்கும் செஸ் ஒலிம்பியாட் உணவு பட்டியல்!

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாதது நேற்று முதல் பெரும் சர்ச்சையாகி வருகிறது. மோடியின் ஸ்டிக்கரை செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஓட்டி வரும் நிலையில் அதனை சிலர் அகற்றவும் செய்தனர். இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது.

குஷ்பு சாடல்

குஷ்பு சாடல்

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக நிர்வாகி ஒருவர் வழக்கு கூட தொடர்ந்துள்ளார். இந்தச் சூழலில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு இது குறித்து கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாதது தமிழகத்துக்கு தான் அவமானம் எனக் கூறியிருக்கிறார். மேலும், சர்வதேச அளவில் தமிழகத்துக்கு இத்தகைய பெருமை கிடைக்க காரணமே மத்திய அரசு தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    PM Modi தமிழர்களை பெருமை படுத்தியவர் - L.Murugan
    தமிழக அரசுக்கு வினா

    தமிழக அரசுக்கு வினா

    மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்காவிட்டால் செஸ் ஒலிம்பியாட் எப்படி சென்னையில் நடந்திருக்கும் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள குஷ்பு, அரசியல் நாகரீகம், பண்பாடு, மரியாதை தெரியாத அரசாக திமுக அரசு இருக்கிறது என சாடியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜக தலைவர் படத்தை தாங்கள் வைக்கச் சொல்லவில்லை என்றும் தாங்கள் வைக்கச் சொல்வது பிரதமரின் படத்தை தான் எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

    குஷ்பு கருத்து

    குஷ்பு கருத்து

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் இருவருக்குமே பிரதமர் மோடியை மதிக்கத் தெரியவில்லை எனவும் கூறியிருக்கிறார். பாஜகவில் பல நாட்களாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த குஷ்பு, செஸ் ஒலிம்பியாட் விளம்பர விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    English summary
    Actress Kushbu says, The DMK government does not know how to respect the Prime Minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X