பிரேமலதாவை சும்மா குத்தம் சொல்லக்கூடாது! விஜயகாந்துக்கு ''கர் கர்றுன்னு''.. குட்டி பத்மினி சொன்ன கதை
சென்னை: விஜயகாந்தை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என பிரேமலதாவை யாரும் குறை சொல்லக் கூடாது என்றும் அவர் எந்தளவுக்கு கேர் எடுத்து தனது கணவரை கவனித்துக் கொண்டார் என்பது தனக்குத் தெரியும் எனவும் நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துக்கு வீட்டிலேயே ''கர் கர்றுன்னு'' மூச்சு இழுத்ததால் தான், அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக பிரேமலதா தன்னிடம் கூறியதாகவும் விஜயகாந்துக்கு காய்ச்சல் கூட அடிக்காத நிலையில் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தததையும் தன்னிடம் பிரேமலதா பகிர்ந்துக்கொண்டார் எனவும் நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாதம் மாதம் செக் அப்பிற்கு அழைத்துச் செல்வதை போல் தான் டிசம்பர் மாதமும் விஜயகாந்தை செக் அப்பிற்கு அழைத்து சென்றேன் என பிரேமலதா தன்னிடம் கூறியதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். உயிர் பிரிவதற்கு முன்னர் கூட ''நான் இருக்கேங்க.. நான் இருக்கேங்க'' என்று விஜயகாந்தை கையை பற்றி பிரேமலதா கூறியதை கூட பேட்டியில் குறிப்பிட்டார் குட்டி பத்மினி. விஜயகாந்தை முதல் முறையாக தாம் நேரில் சந்தித்தது பற்றி கூறிய குட்டி பத்மினி, மதுரையிலிருந்து சென்னைக்கு அந்தக் காலத்தில் தாம் பேருந்தில் வந்த போது விஜயகாந்தும் அந்த பேருந்தில் பயணித்ததாகவும் அப்போது அவர் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது சீட் அருகே ஒரு இடம் இருந்ததால் விஜயகாந்தை அழைத்து தனது அருகில் உட்கார சொன்ன பழைய நினைவலைகளையும் குட்டி பத்மினி பகிர்ந்துக்கொண்டார். ஜெயலலிதாவை மட்டும் அவர் எதிர்க்காமல் அரசியல் செய்திருந்தால் அவர் மறைவுக்கு பிறகு விஜயகாந்த் தான் முதலமைச்சராக வந்திருப்பார் என்ற தனது ஆதங்கத்தையும் பகிர்ந்துக்கொண்டார். அதேபோல் பிரேமலதாவை பற்றி யாரும் குறைசொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டவர், உடல்நிலை சரியில்லாத ஒரு மனிதரை இத்தனை ஆண்டுகளாக பார்த்துக்கொள்வது என்பது சாதாரணமான காரியமல்ல எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications