பிரபல நடிகை ரோஜா.. திடீர்னு புடவையை செருகி.. அத்தனை பேர் சுற்றி நிற்க.. திகைத்த திருப்பதி.. வாரே வா
சென்னை: ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜாவின், விளையாட்டு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென அரசியலிலும் என்ட்ரி தந்தார்.. ஆந்திர அரசியலில் "ஃபயர் பிராண்ட்" என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா..

சினிமா சான்ஸ்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல அதிரடிகளை செய்தவர்.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா.. இவரது அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே தொகுதி மக்களால் பெரிதும் பேசப்பட்டதால், அமைச்சர் பதவியும் தானாகவே இவரை தேடி வந்தது... சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்...
எனவே, சுற்றுலா, கலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆந்திர மாநில அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும்போதெல்லாம், மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து கலகலப்பாகி விடுவார் ரோஜா..

டான்ஸ் ஆடிய ரோஜா: மாணவிகள் மேடையில் நடனமாடி கொண்டிருந்தால், அவர்களுடன் சேர்ந்து ரோஜாவும் டான்ஸ் ஆடுவார்.. கபடி விளையாடினால், அவர்களுடன் சேர்ந்து ரோஜாவும் கபடி விளையாடுவார்.. அரசியலில் இறங்கினாலும், அமைச்சராகவே பதவிவகித்தாலும், மாணவிகளுடன் சகஜமாக ஆடிய நடனம், காண்போரை வியக்க வைத்து வருகிறது..
இதைபற்றி ஒருமுறை செய்தியாளர்கள் ரோஜாவிடமே கேட்டனர்.. அதற்கு ரோஜா, குழந்தையாக இருந்தபோது அமைதியாக இருந்தேன்... அப்போது இது போன்ற சான்ஸ்கள் எனக்கு கிடைப்பதில்லை.. ஆனால், இப்போ சான்ஸ் கிடைச்சாச்சு.. அதனால், அந்த சான்ஸை மிஸ் பண்ண முடியல.. அதான் பயன்படுத்தி கொள்கிறேன்" என்றார்... இதோ. இன்றுகூட ஒரு நிகழ்வு நடந்துள்ளது..
கிரிக்கெட் போட்டி: திருப்பதியில் நடந்த கோடைகால விழா ஒன்றில் கலந்து கொண்டார் ரோஜா.. அங்கு பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.. அவர்களுடன் சேர்ந்து ரோஜாவும் கிரிக்கெட் விளையாடினார். புடவையை இழுத்து செருகி, மாணவர்களுடன் விளையாடி அசத்திவிட்டார்... இதை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை..
பச்சை கலர் சேலையை இழுத்து செருகி, ரோஜா விளையாடும் இந்த கிரிக்கெட் வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது..

ரோஜா ரோஜா: பொதுவாக, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறையானது, அந்த அளவுக்கு பிரபலமானது கிடையாது.. இதன்காரணமாகவே, சுற்றுலா துறை அமைச்சர்கள் பற்றின செயல்பாடும், செய்திகளும் மக்களை பெரும்பாலும் சென்றடைவதும் இல்லை.. ஆனால், ரோஜா இந்த பொறுப்புக்கு வந்தபிறகு, சுற்றுலா துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது..
இயல்பாகவே கலாரசனையும், கலகலப்பு குணமும் கொண்ட ரோஜாவுக்கு, இந்த துறை மிக பொருத்தமாகவே அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.. எந்தவித பந்தாவும், கெடுபிடியும் இல்லாமல், சகஜமாக பழகும் அவரது இயல்பான குணமும், இதற்கு பேருதவியாக திகழ்ந்து வருகிறது.. அந்தவகையில், சுற்றுலா மற்றும் கலைகளை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும், அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே வருகிறார் நடிகை ரோஜா செல்வமணி..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications