நானும் ரவுடிதான் பட காட்சிகளை பயன்படுத்தினோமா? அதெல்லாம் கிடையாது! தனுஷ் நோட்டீஸுக்கு நயன்தாரா பதில்
சென்னை: நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை என்றும் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் நடிகர் தனுஷின் வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வுண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் அந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ காட்சிகளுடன் நயன்தாரா திருமண வீடியோவை பதிவை வெளியிட்டுள்ளது. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இழப்பீடாக ரூ 10 கோடி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வுண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் மனுவிற்கு நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரின் வழக்கறிஞர் அளித்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விதிகளை மீறவில்லை.
பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை. திருமண ஆவணப்படத்தில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மீறல் இல்லை என அவர் பதில் அளித்துள்ளார். எனவே இந்த வழக்கு டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications