ஒரு போன் காலை எடுத்ததால் வந்த வினை.. கண்ணீருடன் கமிஷனர் அலுவலகம் சென்ற டிவி சீரியல் நடிகை நிலானி
சென்னை: கார் லோன் என்ற பெயரில் தன்னிடம் வினோதமான முறையில் பணமோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சீரியல் நடிகை நிலானி புகார் கெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகை நிலானி மகாபாரதம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர். இவர் பிரியசகி, சுந்தரகாண்டம், தென்றல், பைரவி, இதயத்தை திருடாதே, பிரியமானவள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையின் போது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து பேசினார். அவர் போலீஸ் சீருடையில் வீடியோவில் பேசுகையில் காவலர் சீருடை அணிவதற்குக் கேவலமாக உள்ளது. அநியாயமாக பொதுமக்களைச் சாகடித்துள்ளனர் என பேசியிருந்தார்.
அவர் மீது ரிஷி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நிலானி கைது செய்யப்பட்டார். இது போல் மக்கள் பிரச்சினைகளுக்காக நிலானி சமூகவலைதளங்களில் குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் காந்தி லலித்குார் என்பவருடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருடனான பழக்கத்தை நிலானி தவிர்த்தாராம். நிலானியை லலித் நிறைய முறை போய் சந்திக்க முயன்றும் அவர் சந்திக்க மறுத்ததாக கூறி லலித் குமார் கே கே நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் லலித் இறப்பதற்கு முன்பு நிலானியை மிரட்டும் ஆடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து கொசு மருந்தை குடித்து நிலானி தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. மயக்கத்தில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் நிலானி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரிடம் மர்மநபர்கள் வினோதமான முறையில் பண மோசடி செய்ததாக நிலானி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
நிலானிக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாராம். அவர் நிலானியிடம் குறைந்த வட்டியில் கார் லோன் வழங்குவதாக தெரிவித்தாராம். இதையடுத்து நிலானி அது குறித்து முழு விவரங்களையும் கேட்டுள்ளார். பின்னர் ஆன்லைனில் ஒரு லிஙகை கொடுத்து அதில் லாகின் செய்யுமாறு அந்த நபர் கூறியுள்ளார்.

இந்த லிங்கை ஓபன் செய்தால் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் இதில் இருக்கும் என தெரிவித்தாராம். உடனே நிலானி அந்த லிங்கை ஓபன் செய்துள்ளார். அப்போது அதில் அந்த நபர் கூறியதை விட அதிக அளவு வட்டி காட்டியது. இதனால் கார் லோன் வேண்டாம் என நிலானி மறுத்தாராம். ஒரு மாதத்திற்கு பிறகு நிலானிக்கு ரூ.8.80 லட்சம் கிரெடிட் ஆனதாம். அதற்கு வட்டியாக ரூ 10,988 கொடுக்க வேண்டும் என மெசேஜ் வந்ததாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிலானி தனக்கு போன் செய்த அந்த நபரை தொடர்பு கொண்டு நான் லோன் வேண்டாம் என சொல்லியும் என் வங்கிக் கணக்கில் ஏன் பணம் போட்டீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது. மேலும் நிலானியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்ததால் அதிர்ச்சி அடைந்த நிலானி இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications