பாஜகவுக்கு வரும் இன்னொரு ராமன்.. நடிகை பிரியா ராமன்.. விரைவில்!
நடிகை பிரியா ராமன் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது
சென்னை: கூடிய சீக்கிரம் நடிகை பிரியா ராமன் பாஜகவில் இணைய போவதாக சொல்கிறார்கள். அதற்கான அறிவிப்பும் ஓரிரு நாளில் வெளியாகும் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் கதை எழுதி நடித்த வள்ளி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் பிரியா ராமன். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வந்தார்.

நேசம் புதுசு படத்தில் தன்னுடன் உடன் நடித்த ரஞ்சித்தை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். 2 மகன்கள் இருந்தும், கருத்து வேறுபாடு காரணமாக 2014-ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார் பிரியா ராமன். இந்நிலையில் இவர், பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியில் இணைவதற்காகவே ஆந்திராவில் உள்ள பாஜக பிரமுகர்களை பிரியா ராமன் சந்தித்து பேசிவிட்டாராம். அதனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் 2 நாளில் வெளியாகும் என்கிறார்கள்.
ஏற்கனவே நடிகர், நடிகைகளை குறி வைத்துதான் பாஜகவின் அரசியல் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. இப்போது தமிழகத்திலும் இது தொடர ஆரம்பித்துள்ளது. இப்படிதான் 2 மாசத்துக்கு முன்னாடி கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.
ஆனால் பிரியா ராமன் பாஜகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள். நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகி, அமமுகவுக்கு சென்றார். அங்கே அவர் எப்படி இருக்கிறார்? தற்போதைய அவரது நிலைப்பாடு என்னவென்று தெரியாத பட்சத்தில், பிரியா ராமனின் அரசியல் வருகை கவனிக்கத்தக்கதாக உள்ளது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications