நிர்வாண வீடியோ! இதனால்தான் நான் கேரவனில் உடை மாற்றுவது கிடையாது! பகீர் கிளப்பிய நடிகை ராதிகா!
சென்னை: திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என, நீதிபதி ஹேமா கமிட்டி சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இது மலையாள திரைப்பட உலகில் பெரும் பூகம்பமாக வெடித்துள்ள நிலையில், நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாள படப்பிடிப்பின்போது கேரவனில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுக்கப்பட்டதாக நடிகை ராதிகா கூறியுள்ளார்.
மலையாள சினிமாக்கள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இந்த சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது.

ஆனால், இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்த, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது.
இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.
இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து சித்திக், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். மற்றொரு நடிகரான ரியாஸ் கான் மீதும் ரேவதி குற்றம்சாட்டியிருக்கிறார்.
ரேவதியை தொடர்ந்து, பெங்காலி நடிகை ஒருவர், கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார். இப்படியாக நடிகர்கள், தயாரிப்பாளரக்ள், இயக்குநர்கள் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு குவிந்து வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த கேரள அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இப்படி இருக்கையில், இது தொடர்பான கேள்விக்கு நடிகை ராதிகா அளித்துள்ள பதில், விவாதங்களை கிளப்பியுள்ளது. அதாவது, “கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்கின்றனர். அதை செட்டில் நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து மொபைலில் பார்த்து ரசிப்பதை நான் நேரடியாக பார்த்து உள்ளேன். இதனால் நான் பயந்து போய் ஹோட்டலில் அறை எடுத்து ஆடையை மாற்றி உள்ளேன்.
இது குறித்து சக நடிகைகளுக்கும் எச்சரித்துள்ளேன். பல நேரங்களில் பாதுகாப்பு கோரி நடிகைகள் என் கதவை தட்டுவதுண்டு. அவர்களுக்கு நான் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன். கேரவன் பிரச்னை விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். மலையாள திரைப்பட உலகில் பாலியல் புகார் விவகாரம் வெடித்து கிளம்பியுள்ள நிலையில், அத்திரைப்பட துரை குறித்து ராதிகா பேசியிருப்பது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications