கவர்ச்சி போஸ்.. ஆபாச நடன அசைவுகள்.. இயக்குநர் மீது ராதிகா ஆப்தே மீடூ புகார்
பிரபல டைரக்டர் மீது நடிகை ராதிகா ஆப்தே பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: கவர்ச்சியாக ஆடை அணிய சொன்னார்.. ஆபாசமாக போஸ் கொடுக்க சொன்னார்.. என்று ஒரு இயக்குனர் மீது நடிகை ராதிகா ஆப்தே புகார் கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் முழுவதும் பிரபலங்கள் ஒவ்வொருவராக தங்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழகமெங்கும் பரபரப்பானது. இதனால் புகாருக்கு உள்ளானவர்கள் ஒரு சிலர் கோர்ட் வரை சென்று மான நஷ்ட வழக்கு போட்டு அதை எதிர்கொண்டு உள்ளனர்.

மனம் வரவில்லை
இதனால்தானோ பத்திக் கொண்டு எரிந்த மீடூ சற்று தணிய ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல், மீடூ புகார் அளிப்பவர்கள் எந்த வித ஆதாரத்தையும் இதுவரை வெளியிடாததால் ஒரு தரப்பினரின் நியாயத்தை மட்டுமே பார்க்க யாருக்கும் மனம் வரவில்லை.

மும்பை ஹோட்டல்
இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே ஒரு மீடூ புகாரை அளித்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சியின் டாக் ஷோவுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: "புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கான ஆடிஷன் மும்பையில் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தின் இயக்குனர் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். ஆடிஷன் என்பதால் என்னையும் அழைத்திருந்தார். நான் ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டு அப்போதுதான் மும்பை வந்திருந்தேன்.

விக்ரம் ஹீரோ
டைரக்டர் கூப்பிட்டார் என்பதற்காக அந்த ஓட்டலுக்கு சென்றேன். ஆனால் அது ஒரு ஒரு குப்பை ஹோட்டல்.. ஒரே அழுக்காக இருந்தது. அங்கு ஒரு அறையில் இயக்குநர் உள்பட 12 பேர் இருந்தனர். என்னிடம் பேசிய டைரக்டர், விக்ரம் ஹீரோ என்றும், சரித்திர படம் என்றும் சொன்னார். என்னிடம் அவர், சிறிய கோட் ஒன்றை கொடுத்து போட்டு கொள்ள சொன்னார். ஒரு போட்டோகிராபர் என்னை விதவிதமாக போட்டோ எடுத்தார்.

ஆபாச மூவ்மெண்ட்
கவர்ச்சியாக போஸ் கொடுக்க சொன்னார்கள். நான் தயங்கினேன். ஆனால் என்னை வற்புறுத்தினார்கள். பிறகு அந்த டைரக்டர் என்னை ஆபாசமாக டான்ஸ் மூவ்மெண்ட்டுகளை செய்து காட்ட சொன்னார். ஆனால் அவர் படத்துக்காகத்தான் அப்படி ஆடிஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவழியாக சாக்கு சொல்லி விட்டு அந்த அந்த ஹோட்டலில் இருந்து தப்பித்தேன். ஆனால் அந்த டைரக்டர் அந்த படம் சம்பந்தமான ஷூட்டிங்கையே அதன் பிறகு ஆரம்பிக்கவில்லை." இவ்வாறு ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

பெயர் இல்லை
இதுவும் ஒரு மீடூ விவகாரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இயக்குநரின் பெயரை ராதிகா தெரிவிக்கவில்லை. இதுவரை புகார் சொன்னவர்களாவது, பாலியல் தொல்லை கொடுத்தவரின் பெயரை சொன்னார்கள். ஆனால் ஆதாரத்தை தரவில்லை. ராதிகா ஆப்தேவோ, ஆதாரம் மட்டுமில்லை, சம்பந்தப்பட்ட டைரக்டரின் பெயரையும் கடைசிவரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications