நேற்று புகார்.. இன்று வாபஸ் ஏன்? நடிகை ராணி விளக்கம்
Recommended Video

சென்னை: 350 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதாலும் சண்முகராஜன் என்னிடமும் எனது கணவரிடமும் மன்னிப்பு கேட்டதாலும் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டேன் என்று நடிகை ராணி பேட்டி அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நந்தினி சீரியலில் நடிகர் சண்முகராஜனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் செங்குன்றத்தில் ஒரு துணிக்கடையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ராணிக்கும் சண்முகராஜனுக்கும் ராணி கணவர் பிரசாந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து செங்குன்றம் காவல் நிலையத்துக்கு சென்ற ராணி தனக்கு கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை விடுத்து வருகிறார் என்று சண்முகராஜன் மீது ராணி நேற்று புகார் அளித்தார். இந்நிலையில் இன்று காலை அதை அவர் வாபஸ் பெற்றார்.
நேற்று புகார் கொடுத்துவிட்டு இன்று வாபஸ் வாங்குவது ஏன் என கேள்வி எழுந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் இந்த சீரியலிலிருந்து விலகிவிட்டால் 350 குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.
அவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்படும். மேலும் இனி இதுபோல் நடக்காது, நான் செய்தது தவறுதான் என்று என்னிடமும் எனது கணவரிடமும் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டு விட்டார். இதனால் நான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டேன் என்றார்.

இதுகுறித்து சண்முகராஜன் கடந்த 20 நாட்களாக நந்தினி சீரியலில் நடித்துவருகிறேன். அப்போது எனக்கும் இந்த சீரியலில் எனக்கு மனைவியாக நடித்து வரும் ராணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
[ நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி ]
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் என்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். தற்போது நாங்களும் அவர்களும் சமரசம் ஆகிவிட்டோம். மீடியாக்களில் சொல்வது போல் இது பாலியல் தொல்லையெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் கேஸை வாபஸ் வாங்கிவிட்டார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications