நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி
Recommended Video

சென்னை: நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி.
வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ற பாட்டிலும் நடனமாடியுள்ளார். நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து சரத்குமார் குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராணி (44). இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.

நடிகையின் கணவராக வருபவர்
இதுதவிர நந்தினி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் வடபழனி சாலிகிராமத்தில் அருணாசலம் சாலையில் கணவர் பிரசாந்துடன் தங்கியுள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சண்முகராஜன் (55). நந்தினி சீரியலில் நடிகை ராணியின் கணவராக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு
கடந்த 11-ஆம் தேதி சென்னை வடபழனியில் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகை ராணி சண்முகராஜனை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ராணியோ சண்முகராஜனை நிஜமாகவே அறைந்துவிட்டார்.

சண்முகராஜன்
இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜன் ராணியிடம் தகராற்றில் ஈடுபட்டார். இதையடுத்து உடனிருந்தவர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்நிலையில் தொலைக்காட்சி தொடருக்காக சென்னை செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் தீபாவளிக்கு துணி எடுப்பது போல் ஒரு காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது ராணி, அவரது கணவர் பிரசாந்த், சண்முகராஜன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.

வழக்கு பதிவு
இதையடுத்து கணவருடன் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்துக்கு சென்ற ராணி, கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வாபஸ்
பின்னர் சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து செங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அவர் வாபஸ் பெற்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications